Wednesday, September 12, 2007

பிரியம் ஒன்றே போதுமே!


நிச்சயமாய்த் தினமொரு
முறை பேசியதில்லை!

தேவைகளை உருவாக்கியோ,
தேவைகளைக் கொன்றோ
தொலைபேசியில் விளித்ததுமில்லை!

எழுதும் மடல்களுக்கும்
எந்தவிதப் பதிலுமில்லை!

பரீட்சை முடிவுகள்,
பணிக்குச் சேர்ந்த நாள்,
திருமண வைபவம் முதலான‌
எவற்றையும் ஞாபக அடுக்குகளில்
பூசி வைத்ததன் தடங்கள் ஏதுமில்லை!

எங்கேனும் தற்செயலாகப்
பார்த்துக் கொண்டால்
தளிர்விடும் சிநேகிதம்.

"உன் இயல்பே அப்படித்தான்",
"பணிப்பளு அதிகமாயிருந்திருக்கும்",
"வேறேதும் சிக்கல் இருக்குமோ"
சமாதானமாய்த் தன்னுள்ளே
கேள்வியும் கேட்டுப் பதிலும் சொல்லிப்
பெருமிதப்படும் உள்ளார்ந்த அன்பு.

இவ்வளவிருந்தும் இந்த உறவை
நட்பென்றழைப்பது எப்படி?

பரஸ்பரம் பேசிக் கொள்ளுதலிலும்,
பதில் சொல்லுதலிலும் மட்டும் தானா
நட்பை உறுதிப்படுத்த முடியும்? என்று
பரிகசித்தாலும், வருடமொரு முறை
எவ்விடத்திருந்தாலும்,
எந்நிலையிலிருந்தாலும்
தொலைபேசியில் விளித்துப்
"பிறந்தநாள் வாழ்த்து"த் தெரிவிப்பாயே!

அந்தப் பிரியம் ஒன்றே போதுமே!

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/12/2007 01:48:00 PM, |

20 பின்னூட்டங்கள்:

  At Wednesday, September 12, 2007 2:05:00 PM Anonymous Anonymous நவின்றது:
அருமையான கவிதை

--
சேவு. முத்தப்பன்
  At Wednesday, September 12, 2007 2:46:00 PM Anonymous Anonymous நவின்றது:
Yaaru da andha varudadhirkku orey oru murai call panni birthday wish sollardhu enakku theriyama ;) Enamo ponga.....Anyways poem is toooooooooooooo gud da :-)
  At Wednesday, September 12, 2007 3:15:00 PM Blogger Vg நவின்றது:
Good one da.. Its hundred percent true abt friendship.. Thanks for sharing.. :)

Archu,
Athu nan than.. ;)
  At Wednesday, September 12, 2007 7:17:00 PM Blogger surya நவின்றது:
ரொம்ப நல்லா இருக்கு

it happens to all.we may like some persons very much but we may not be contacting often.but they will be somewherelse in our heart, along withour heartbeats, remembered in each of our activities.
such relationship is one step ahead of friendship.
it is not a relationship
to be cherished
but feelings to be felt.

nicely said
  At Wednesday, September 12, 2007 10:36:00 PM Blogger Arun நவின்றது:
good da.. keep writing on stuffs other than the pazhaya kallu kaadhal.. u r doing well da.. keep it up.. when are u releasing ur first book kavignare??..

andha naalai edhirpaarthu kaathirukkum.. arun
  At Thursday, September 13, 2007 6:47:00 AM Anonymous Anonymous நவின்றது:
kandipa may 30 th wish panati kuda.. will surely call on May 31 :))))

A good one da.. nala different a eppa aluthura da.. Good.. Keep it up :)
@ சேவு. முத்தப்பன்,

நன்றி தம்பி. உன் வரவு நல்வரவாயிற்று.
@Archana,

//Yaaru da andha varudadhirkku orey oru murai call panni birthday wish sollardhu enakku theriyama ;) //

ஒன்றா இரண்டா...மூன்று!! (சும்மா தமாசு..).. அப்படியும், இப்படியும், அங்கொன்றும், இங்கொன்றுமாய் அகம்கவர்ந்த நட்பு அலைந்து கொண்டே தான் இருக்கிறது.

//Enamo ponga.....Anyways poem is toooooooooooooo gud da :‍) //

நன்றி நன்றி.
@vg,

//Good one da.. Its hundred percent true abt friendship.. Thanks for sharing.. :)//

நன்றி நட்பே. மிகச் சரியாகச் செப்பியிருக்கிறேன் என்று சொன்னது மகிழ்ச்சி. தற்கால வாழ்வில் இந்நிலை வெகு இயல்பாகப் பொருந்துகிறது அல்லவா?

//Archu,
Athu nan than.. ;) //

உண்மையை ஒத்துக் கொள்ளும் உத்தமனே.. நீ வாழ்க.. உன் குலம் வாழ்க ;‍)

ஆனாலும் நீ முற்றிலும் பொருந்துவாயா அதற்கு? இல்லை என்று என் உள்மனம் சொல்கிறது!
@இசக்கிமுத்து,

உங்கள் வரவிற்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி.

வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.
@சூர்யா,

//ரொம்ப நல்லா இருக்கு//

நன்றி சூர்யா.

//it happens to all.we may like some persons very much but we may not be contacting often.but they will be somewherelse in our heart, along withour heartbeats, remembered in each of our activities.
such relationship is one step ahead of friendship.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" ‍என்பதே என் ஒற்றை வரி வழிமொழிதல் இதற்கு.


//it is not a relationship
to be cherished
but feelings to be felt.//

அடடா.. அசத்திட்டீங்க.. கலக்கல்! ;‍)
@arun,

//good da.. keep writing on stuffs other than the pazhaya kallu kaadhal.. u r doing well da.. keep it up.. //

நன்றி நண்பா.. அதுவும் சரி.. வெகு வருடங்களாக அருகிருந்து பார்த்து வரும் ரசிக நட்பே! மாற்றம் என்ற மாறாத ஒன்று! சரியா? ;‍)

வாழ்த்துக்களுக்கு நன்றி.

//when are u releasing ur first book kavignare??..//

தெரியவில்லை.. காலம் கைகூடி வரும் வேளையில் கட்டாயம் வைப்பேன் அழைப்பிதழை! ;‍)

//andha naalai edhirpaarthu kaathirukkum.. arun //

நானும்.. ;‍‍)
@ramesh vg,

//kandipa may 30 th wish panati kuda.. will surely call on May 31 :)))) //

அடடா.. அடுத்தடுத்து அடுக்கடுக்காய் பல உண்மைகளை வெளிவிடும் வை. க. ரமேஷுக்கு ஒரு ஓ! போடக் கடவது!


//A good one da.. nala different a eppa aluthura da.. Good.. Keep it up :) //

நன்றி நண்பா..உங்கள் வாழ்த்துக்களுடனும், ஆதரவுடனும்...
  At Thursday, September 13, 2007 3:07:00 PM Blogger Sumathi. நவின்றது:
ஹாய் ராகவ்,

//எவ்விடத்திருந்தாலும்,
எந்நிலையிலிருந்தாலும்
தொலைபேசியில் விளித்துப்
"பிறந்தநாள் வாழ்த்து"த் தெரிவிப்பாயே!

அந்தப் பிரியம் ஒன்றே போதுமே!//

தூள் கிளப்பிட்டீங்க போங்க...ரொம்ப அருமையா இருக்கு.
@sumathi,

//தூள் கிளப்பிட்டீங்க போங்க...ரொம்ப அருமையா இருக்கு//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி சுமதி.
  At Tuesday, September 18, 2007 11:52:00 PM Blogger SHRIE நவின்றது:
azhaga ezhuthukindrirgal Raghavan, Keep it up. - Sridhar.
//azhaga ezhuthukindrirgal Raghavan, Keep it up. - Sridhar.
//

Thank you Sridhar :)
  At Saturday, October 06, 2007 12:44:00 AM Blogger Unknown நவின்றது:
Great ra machan!!! Gud kavithai.. practicala think pannirukka.. ithu unmaithaan...
@jeyan,

//Great ra machan!!! Gud kavithai.. practicala think pannirukka.. ithu unmaithaan...//

நன்றி ஜெயன். உன் 'அனானி' உருவத்திற்கு விடுதலை கொடுத்ததற்கும் ;-)