Thursday, May 10, 2007

அறிவுமதியின் நட்புக்காலம் - 2

உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று உனக்கான
என் கவிதை!

*

அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற இரண்டு
மிகச்சிறிய இதயங்களின்
நட்பில் இருக்கிறது!

*

அம்மா அப்பாவிடம்
அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே..
"எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது!
ஏனெனில் இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்!"
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்!

*

கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே உணரும்
பாக்கியம் எத்தனை
கண்களுக்கு வாய்த்திருக்கும்

*

'எனக்கு மட்டும்' என்று
குவிகிற மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
'வெளி'வாங்கிப்
பூக்கிறது நட்பு

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/10/2007 12:42:00 PM, |

6 பின்னூட்டங்கள்:

  At Thursday, May 10, 2007 9:17:00 PM Blogger surya நவின்றது:
nalla rasanai yudan koodiya good collection
@surya,

நன்றி தோழி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

ரசனை எனக்கா அறிவுமதிக்கா? ;-)
  At Tuesday, May 29, 2007 5:37:00 PM Blogger நந்தா நவின்றது:
நட்புக்காலம். எவ்வளவு அருமையான புத்தகம் அது.

நீங்க இந்த கவிதை படிச்சிருக்கீங்களா?

"நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்லும் பூங்காக்கள் இருக்கும் வரை வாழ்க்கை அநாகரீகமானதுதான்"


அந்த புத்தகத்திலுள்ள எல்லாமே நல்ல கவிதைகள்தான்.
@nandha,

நிச்சயம் படித்திருக்கிறேன் நந்தா..

ஏறக்குறைய எல்லாக் கவிதைகளுமே
இதயத்தின் சிகரம் தொட்டவை தான்!

அழகு ;-)
thanks for this poesm , i ve read them again here
@Karthic Prabhu,

//thanks for this poesm , i ve read them again here //

Thanks. Good that you got a chance to refresh ;-)