Tuesday, December 19, 2006

புதுப்பிக்கப்படும் காதல்


பெரும்பான்மையான காதல்கள்
வாரிசுகளின் பெயர்கள்

வாயிலாகப் புதுப்பிக்கப்படுகின்றன

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/19/2006 12:10:00 PM, | 20 பின்னூட்டங்கள்
Wednesday, December 13, 2006

ஜென்மபந்தம்

உனக்கு எத்தனை முறை
எடுத்தியம்புவது?
இப்படி வரைமுறையில்லாமல்
குறும்பு செய்வது நல்லதல்ல என்று?

சோதிக்கப் பிறந்தவள் நீ!
உன்னால் சோதிக்கப்படுவதற்காகவே
பிறந்தவன் நான்!

உன் ஆய்வின் முடிவு
எப்போது நிகழும்?
என் ஆவி அடங்கிய பிறகா?

உலையில் இருக்கும் நேரம்
அதிகரிக்க இறுகுமாம் இரும்பு!
உன் பாச அலையில் அமிழும் நேரம்
அதிகரிக்க மென்மையாவேன் நான்!

என் ஒட்டுமொத்த ஆண்மைத்திமிரையும்
அரையங்குலப் பார்வையில்
அஸ்தமனம் செய்து விட்டாய்!

இந்த ஜென்மத்தில் உன்
காதலை என்னால் ஜெயிக்க முடியாது!
இருக்கவே இருக்கிறதாமே
ஏழு ஜென்மங்கள்..

நான் நானாகவே பிறக்க வேண்டும்
உன் காதல் நினைவுகளை மட்டும்
மறு ஜென்மத்திற்கு எடுத்துக்கொண்டு..

காதல் ஒரு பழிவாங்கும் படலமில்லை!
இருப்பினும் உன்னை அடுத்தடுத்த
ஜென்மங்களில் அழகழகாய்க்
காதலிம்சைப் படுத்துவேன் காதலியே...

ஜென்மங்களின் மீதான என்
ஒவ்வாமையை ஒதுக்கிவைக்கிறது காதல்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/13/2006 02:22:00 PM, | 11 பின்னூட்டங்கள்
Monday, December 11, 2006

உனக்கு என்ன தண்டனை தருவது?

கொலை செய்தவனை விடக்
கொலை செய்யத் தூண்டியவனுக்கே
தண்டனை அதிகமாமே?

காதலிப்பவனை விட
காதலிக்கத் தூண்டிய உனக்கு
என்ன தண்டனை தருவது?

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/11/2006 07:21:00 PM, | 4 பின்னூட்டங்கள்

எதிர்மறை விருப்பு

படிப்பதை விட எனக்குப்
படிப்பவர்களை மிகவும் பிடித்தது!
எழுதுவதை விட எனக்கு
எழுதுபவர்களை மிகவும் பிடித்தது!
பாடுவதை விட எனக்குப்
பாடுபவர்களை மிகவும் பிடித்தது!
ஓடுவதை விட எனக்கு
ஓடுபவர்களை மிகவும் பிடித்தது!
..............................
ஆனால் இப்பொழுது தான்
காதலிப்பதை விடக்
காதலிக்க மறுப்பவர்களை மிகவும் பிடிக்கிறது!
உன்னைத் தான்! உறைந்து விடாதே!!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/11/2006 07:14:00 PM, | 1 பின்னூட்டங்கள்

மெளனங்களின் சிநேகிதம்

நீ முதலில் பேசுவாய்
என நானும்
நான் முதலில் பேசுவேன்
என நீயும் வெகுநேரமாகப்
பேசாமலேயே இருந்தோம்!
அதுவரை அழகாக
உரையாடுகிற நம்மிருவரின்
மெளனங்களின் சிநேகிதத்தை
உடைக்க மனமில்லை சகியே!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/11/2006 07:06:00 PM, | 2 பின்னூட்டங்கள்

கட்டிக் கொள்ளும் நினைவுகள்

எத்தனை முறை அதட்டினாலும்
அம்மாவின் முந்தானையைக்
கட்டிக் கொண்டு தூங்கும்
குழந்தையைப் போல
எத்தனை தடவை
காதல் கலக்காத
கவிதை எழுதினாலும்
எப்படியும் ஒருமுறையாவது
என்னைக் கட்டிக்கொள்கின்றன
உந்தன் நினைவுகள்...

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/11/2006 06:59:00 PM, | 2 பின்னூட்டங்கள்