Saturday, June 02, 2007

நட்பு மடல்

 
ஆரம்பத்திலிருந்து கடைசிவரை
எல்லாம் ஒழுங்காயிருக்கிறதா?
 
வழக்கம்போல குசலம்விசாரிப்பு
குறையில்லாமல் உள்ளதா?
 
அங்கங்கே கவனிக்கப்படாமல்
உள்ளனவா சில சந்திப்பிழை,
எழுத்துப்பிழை, பொருட்பிழைகள்?
 
மரியாதை குறையாமல்
வழங்கப்பட்டிருக்கிறதா?

எழுத்துக்களின் நேர்த்தி எவ்விதம்?  

சுருங்கச் சொல்லி விளக்கும்
விதம் கையாளப்பட்டுள்ளதா?
 
உடனடியாகப் பதில்வரும்
யுத்தி உள்ளிருக்கின்றதா?
 
பயனில்லாத விஷயங்கள்
அலசப்பட்டிருக்கின்றவா?
 
இப்படி எவ்விதக் கவலையும்
ஒருபோதும் இல்லாது
எப்போதும் களிப்புடன் செல்கிறது
இரு நட்புள்ளங்களுக்கிடையேயான
உள்ளார்ந்த அன்புடன் கூடிய
உணர்வுப்பகிர்தலுக்கான மடல்!! 
 

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 6/02/2007 04:20:00 PM, |

7 பின்னூட்டங்கள்:

Awesome kavithai as usual.. The simplicity in ur poems are note worthy! :)
  At Thursday, June 14, 2007 1:01:00 PM Blogger Unknown நவின்றது:
மிகவும் நல்ல நடை ராகவன். வாழ்த்துக்கள் பல. நீங்க காரைக்குடியா? எனக்கு மிகவும் பிடித்த ஊர்கள்ள காரைக்குடிக்குதான் முதலிடம். மிகவும் மகிழ்ச்சி.
  At Friday, June 15, 2007 5:10:00 PM Anonymous Anonymous நவின்றது:
Nice poem Raghavan :)
@Ponnarasi,

மிக்க நன்றி. தாமதத்திற்கு வருந்துகிறேன்.
@siva,

நன்றி சிவா.. உங்கள் வரவு நல்வரவாயிற்று..

தாமதத்திற்கு வருந்துகிறேன். இடையே இணையத்தின் பக்கம் வரவியலாமல் போயிற்று.

அடடா.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுக்குப் பிடித்த ஊராக நான் பிறந்த ஊர் காரைக்குடி இருப்பது!!

நீங்கள் எந்த ஊர்?
@ Priya,

மிக்க நன்றி ப்ரியா..


தாமத்திற்கு மன்னிக்கவும்.
unmai thaan :) endha vidha edhirparrpumindriirupadhu natpu matume....