என் பயணங்கள்
வாழ்வின் புதிய திருப்பங்கள்.
தாமதமாகி விட்ட தருணங்களில்
எல்லாம் தன்னிச்சையாய் ஒரு தயக்கம்!
முன்னே கடந்து சென்றவரோ,
பின்னே கடக்கப் போகிறவரோ
ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே என்ற தவம்.
என்றாவது இப்படி நடக்காதா
என ஏங்கிய கனவுகளின் நிஜம்.
சந்தர்ப்பங்கள் வாய்க்காததால்
சவுக்கியங்களை இழந்ததற்காய்
சங்கடப்பட்ட சமயங்கள் ஏராளம்!
தனிமையிலும் இனிமை காண
முடியும் எனும் அனுபவ உண்மை!
எனக்குள்ளும் இருந்த ஆளுமை
உணர்வினைத் தட்டி எழுப்பிய தன்மை.
தலைவாரிப் பூச்சூட்டினால் மட்டும்
தடங்கல்களைத் தவிர்க்கவியலாது என்று
தயக்கமற உணர்ந்து உனக்கான
உணர்வுகளை இனங்காணும் புதுப்பயிற்சி!
சட்டென்று உற்பத்தியாகும் உணர்வுகளுக்கு
சலிக்காமல் பயன்படும் வடிகால்!
தனியாகவே இதுவரை நடந்து
பழகிவிட்ட எனக்கு இந்தப்
புது உறவு புத்துணர்வை அளிக்கிறது!
கண்முன்னே நீண்டு விரியும்
பாதைகள் இப்பொழுதெல்லாம்
தூரத்துச் சொந்தங்களாய்க் கண்டவுடன்
களிப்பாய்க் குசலம் விசாரிக்கின்றன!
தினந்தோறும் தரிசித்தாலும்
திடீர்ச் சுயநலவாதியாய்
மீண்டும் தேவை வரும்வரை
திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை நான்!
தனியாகவே சென்றாலும்
தனித்திருப்பதில்லை தோழனே!
உற்றதோழனாய் உருக்கொண்ட
என் மோட்டார் சைக்கிளே!
நானாய்க் கேட்டேனோ,
நீயாய் உணர்ந்தாயோ
நீயின்றி இன்றைய என் நிலை
கேள்விக்குறி மட்டுமல்ல..
கேலிக்குறியும் கூட!!
ஆரம்பகாலப் பிழைகளை
அன்போடு பொறுத்தருளி எனக்கு
இருசக்கர வாகனப் பயிற்சியளித்த
பட்டம் வாங்காமல் ஆசானாகி விட்ட
இனிய நண்பனே!
உனக்கு என் உளமார்ந்த
கோடானுகோடி நன்றிகள்.
இருசக்கர வாகனப் பயணங்களும்
உனக்கே சமர்ப்பணம்!
குறிப்பு: எனக்கு இருசக்கர மோட்டார் வாகனப் பயிற்சியளித்த (Bike) என் நண்பர்கள் திரு. நாராயணன், திரு. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்.
நாராயணன் = என் வகுப்புத்தோழன். (BE IT classmate)
தமிழ்ச்செல்வன் = என் கல்லூரித்தோழன் (BE CSE but same batch)
நாராயணன் முதன்முதலில் அவருடைய புது வண்டியில் சொல்லித் தந்தார் (Nov 2005) ல். ஆனால் நான் அதனைத் தொடரவில்லை. எனவே மீண்டும் தடங்கல் வந்துவிட்டது. பிறகு தமிழ்ச்செல்வன் (அவர் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு வந்து புது அலுவலகத்தில் சேர்ந்திருந்தார்) என் வேண்டுகோளுக்கிணங்கப் பயிற்றுவித்தார்.
இதனால் நான் அடைந்த, அடைகின்ற பயன்கள் ஏராளம். அதனால், ஒரு நன்றிக் காணிக்கையாய் இந்தக் கவிதை. வெகு நாட்களாய் எழுதவேண்டும் என்று நினைத்திருந்து, நேரமின்மையால் இப்பொழுது எழுதி வலைப்பூவிலும் ஏற்றி விட்டேன்.
மனமார்ந்த நன்றி தோழர்களே!
Labels: நடைமுறை நிகழ்வுகள், நன்றி
6 பின்னூட்டங்கள்:
//ஓஓஓஓ.. இதுக்கு தான் இவ்ளோ பில் டப்பா..ஹா ஹா ஹா.....//
ஏனுங்க இதுக்கெல்லா பில்டப் தரக் கூடாதா?
அது 'பில்ட் அப்' - சேர்த்து சொன்னா 'பில்டப்'ன்னு சொல்லலாம்.. ஆனால் நீங்க அதுக்கும் மேல போய் 'பில் டப்பா' ன்னு தகர டப்பாவை எல்லாம் வம்புக்கு இழுக்கறீங்க.. நியாயமா ;)
// நான் கூட என்னமோ னு நினைச்சேன்..//
அப்பாடா.. நெனச்சீங்களா...? அப்ப என் கவிதைக்குப் பயன் கிடைச்சிருச்சி.. அதானே கவிதையின் கருவே! சரிதானே?
//ரொம்ப நல்லாயிருக்கு... //
நன்றி சுமதி.. ஆனா என் மனப்பூர்வமா என்னோட நண்பர்களுக்கு 'நன்றி' நவில்றதுக்காக எழுதிய கவிதை இது! என்ன கொஞ்சம் தாமசமாயிருச்சு.. ஒரு வருஷம் ;(
valara un kavithai, valga un pugal..
Mikka Nandri nanba.. ;-)
//super kavidai da...sry ipppalam munna mari un kavidhai read pantu udanae comments koduka mudila da. very sorry:o(//
no issues da.. thank you da...
//என்றாவது இப்படி நடக்காதா
என ஏங்கிய கனவுகளின் நிஜம்.//
//தனிமையிலும் இனிமை காண
முடியும் எனுன் அனுபவ உண்மை!//
//தனியாகவே இதுவரை நடந்து
பழகிவிட்ட எனக்கு இந்தப்
புது உறவு புத்துணர்வை அளிக்கிறது!//
//உற்றதோழனாய் உருக்கொண்ட
என் மோட்டார் சைக்கிளே!//
ஓஓஓஓ.. இதுக்கு தான் இவ்ளோ பில் டப்பா..ஹா ஹா ஹா.....
நான் கூட என்னமோ னு நினைச்சேன்..
//நான் மேற்கொள்ளும் அனைத்து
இருசக்கர வாகனப் பயணங்களும்
உனக்கே சமர்ப்பணம்!//
ரொம்ப நல்லாயிருக்கு...