Thursday, May 03, 2007

தபூசங்கரின் 'தேவதைகளின் தேவதை' - 1

இந்த வலைப்பூவில் இது என்னுடைய '50-வது பதிவு' என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆதரவளிக்கும் அனைத்து நட்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


தபூசங்கரின் 'வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?' என்ற புத்தகத்தை நான் 2002ம் ஆண்டு வாங்கினேன் என்று நினைக்கிறேன். அதுதான் அவரின் முதல் புத்தகம் என்றும் படித்ததாய் நியாபகம். நல்ல கவிதைகளின் தொகுப்பு. பிறகு அவர் நிறைய கவிதைகள், புத்தகங்கள் எழுதிவிட்டார்.

அவரின், 'விழி ஈர்ப்பு விசை' யும் மிக அருமையான காதல் கவிதைகளைக் கொண்ட புத்தகம்.

இந்த 'தேவதைகளின் தேவதை' ஆனந்தவிகடனில் வந்த கவிதைகளின் தொகுப்பு..

அவற்றில் சிலவற்றை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
உன்னை எனக்குக் காட்டியது

*

எதற்காக நீ
கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்?

பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு
போதும்!

*

நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தை எல்லாம்
இந்தப் பூமி மட்டுமே
தரிசிக்க முடிகிறது!

ஒரேயொரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்!

வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது வானம்!

*

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப்
பார்த்து விட்டுத்
தவமிருக்கிறேன்.

*

கர்ப்பக் கிரகம்
தன்னைத் தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா
என்ன?

நீ சொம்பில் நீரெடுத்துத்
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக்
கொண்டிருக்கிறேன்
என்னை நானே!

*

நீ யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.

*

நான் உன்னைக்
காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்து விடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க் முடியாது!

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/03/2007 02:10:00 PM, |

6 பின்னூட்டங்கள்:

  At Thursday, May 03, 2007 4:51:00 PM Blogger Priya நவின்றது:
Congrats on your 50th post and thanks for dropping in my blog. Most of the old post I disable coz soemtimes its ahrd to go back and reply searching for it.

If you are interested in leaving comemnts, let me know and I will disbale that post and let you comment.
@priya,

thanks for stepping in and for the wishes.

hmm... i do agree but then any comment being notified will have a link for the post if i am right.. aint i?

sure.. shall do as you said..

நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
  At Monday, May 07, 2007 10:15:00 PM Blogger surya நவின்றது:
congrats on ur 50th post in blog
and
best wishes to write more and more
@surya,

நன்றி தோழி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.
  At Tuesday, May 29, 2007 5:43:00 PM Blogger நந்தா நவின்றது:
50 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தேவதைகளின் தேவதை மட்டுமில்லை. தபூ சங்கரின் எல்லா காதல் கவிதைகளும், உரை நடைகளுமே அழகுதான்.
@nandha,

மிக்க நன்றி..

தாமதத்திற்கான காரணம் தங்களுக்குத் தெரியும்!

இருந்தும் மன்னிக்க வேண்டுகிறேன்.