Wednesday, August 29, 2007

கோபத்தின் வெளிப்பாடு


உனக்கு நான் என்ன
தீங்கு இழைத்தேன் இதுவரை?

புரட்டிப் பார்த்ததில் புத்தி
சுத்திக்கொண்டதே மிச்சம்!

ஏதேனும் மனக்குமுறல் இருந்தால்
பேசித் தீர்த்திருக்கலாமே?

நல்ல இடைத்தரகர்கள்
கிடைப்பது அரிது என்பதனால் தான்
இடிபோல இறக்கினாயோ உன்
கோபக் கனல்களை?

இதைக் கோபம் என்பதா?
கொலைவெறி என்பதா?

என் பொறுமையின் உச்சபட்ச
விளிம்பின் உயரம் தொடவைத்த
பின்னும் ஏனிந்த உக்கிரம்?

உன்னைப் போல் என்னால்
நினைத்த நேரத்தில்
பழிதீர்க்க முடியாது
என்ற பகட்டா?

ஏதோ ஆரம்பித்தாய்
சற்றே தளர்ந்திடுவாய் என்று
சலியாத நம்பிக்கையுடன் இருந்தேன்

என் முரட்டு நம்பிக்கையும்
குருட்டு நம்பிக்கையானது
குறுகிய கால அளவில்!

யார் மீது கோபம் உனக்கு?
அதைச் சொல்லிவிட்டுத் துவக்கு
அடுத்த ஆட்டத்தையாவது!

எதிராளிகள் களைப்படைவது பற்றிக்
கவலையே கொள்ளாத போராளியா நீ?

நிராயுதபாணியாக நின்றாலும்
நிறுத்தி யோசிக்க இயலாத நீசனா நீ?

விதிமுறைகளே படிக்காத உன்னிடம்
வரைமுறைகளை எதிர்பார்ப்பது தகுமா?

ஜாதி வேறுபாடுகள் பார்ப்பதில்
சமர்த்தனானாயோ?  மேல் ஜாதிக்காரன் நீ
என்பதனால் வந்த மெத்தனமா இது?

எதிர்ப்பின் எல்லை கடந்தால்
வெள்ளமாய்க் கொட்டுகிறாய்.

அளவு கடந்த பாசமா?
அடக்க முடியாத துவேஷமா?

உணர்ச்சிகளை வடிகட்டுதல் கடினம்.
உணர்வுகளைக் கூடவா நெறிப்படுத்த
இயலாது உன்னால்?

உன் ஊமைக் கோபத்திற்கு ஆளாகி
ஊமையாய் நின்ற போதிலும்
உள்ளம் இரங்கவில்லையே நீ?

யார்மீதோ கொண்டிருந்த கிலேசத்தை
என் மீது நீ அவிழ்த்தது போல்
நானும் காட்டவா உன்மேல் இருக்கும்
வெளியிடமுடியாத வெறுப்பை?

உனக்கிருக்கும் வீரியமும், வெறியும்
எனக்கும் இருக்கும் என ஏன்
எண்ண மறுக்கிறாய்?

என்ன தான் ஏசினாலும்,
உன் தாக்குதலால் கட்டுண்டு,
பார்ப்பவர்களிடம் நான் கூறும்
ஒற்றை வரியிலான பதில்.

"சர்வம் வருணார்ப்பணம்".

Labels: ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/29/2007 10:56:00 PM, |

9 பின்னூட்டங்கள்:

  At Thursday, August 30, 2007 5:30:00 PM Blogger Priya நவின்றது:
Nice poem about anger and its emotions and feelings which people tend to come out in many situations.
@priya,

thank you for stepping in and for sharing the thoughts.
  At Thursday, August 30, 2007 8:06:00 PM Blogger Sumathi. நவின்றது:
ஹாய் ராகவ்,

//உன்னைப் போல் என்னால்
நினைத்த நேரத்தில்
பழிதீர்க்க முடியாது
என்ற பகட்டா?//

//என் முரட்டு நம்பிக்கையும்
குருட்டு நம்பிக்கையானது
குறுகிய கால அளவில்!//


//அளவு கடந்த பாசமா?
அடக்க முடியாத துவேஷமா?//


//என்ன தான் ஏசினாலும்,
உன் தாக்குதலால் கட்டுண்டு,
பார்ப்பவர்களிடம் நான் கூறும்
ஒற்றை வரியிலான பதில்.//

அப்பப்பப்பாஆஆ...

என்ன அழகான ஒரு வரிகள். இவை எல்லாமே என்னை மிக மிக பாதித்து விட்டது. இதற்கு ஏதாவது தண்டனை வழங்கியே தீர வேண்டும் உங்களுக்கு
  At Thursday, August 30, 2007 8:14:00 PM Blogger Sumathi. நவின்றது:
ஹாய் ராகவ்,

நீங்க இவ்ளோ அழகா கூட கவிதை யெல்லாம் எழுதுவீங்களா?
நான் உங்களுக்கு சில blogs தரேன்,
விரும்பினால் படிச்சு பாருங்க.

http://ushisara.blogspot.com
http://gayatri8782.blogspot.com
  At Saturday, September 01, 2007 1:54:00 PM Blogger Unknown நவின்றது:
super kavidhai da.....thw words u have used are so apt and amazing....these kind of lyrics can only come out from a person who has experienced this before.....not sure if u have experienced too..
@priya,

Thanks for the attendance and feedback.


//Nice poem about anger and its emotions and feelings which people tend to come out in many situations.//

Well said. Exactly!
@sumathi,

//அப்பப்பப்பாஆஆ...//

என்னங்க உங்க அப்பா நியாபகம் வந்துருச்சா? ;-)

//என்ன அழகான ஒரு வரிகள். இவை எல்லாமே என்னை மிக மிக பாதித்து விட்டது. இதற்கு ஏதாவது தண்டனை வழங்கியே தீர வேண்டும் உங்களுக்கு //

மிக்க நன்றி. என்ன தண்டனை என்று சொல்லவே இல்லையே நீங்கள்.. அன்போடு தரும் எந்த தண்டனையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே ;-)
@sumathi,

//நீங்க இவ்ளோ அழகா கூட கவிதை யெல்லாம் எழுதுவீங்களா?//

ஏதோ எழுதிக்கிட்டு இருக்கேனுங்க கொஞ்ச காலமா.. நன்றிங்க..

இதோ பாக்கிறேனுங்க..
@santa,

Thanks for the attendance and feedback da..

//super kavidhai da.....thw words u have used are so apt and amazing....these kind of lyrics can only come out from a person who has experienced this before.....not sure if u have experienced too.. //

deai.. because of being experienced only i just penned down da.. ;-)