Tuesday, August 21, 2007

நூறு ரூபாய்

அம்மா ஆசையாய்க் கொடுத்ததோ?
 
அப்பா ஆசிர்வதித்துக் கொடுத்ததோ?
 
பிரிவுநாளின் நினைவாய்ப்
பிரியமாய்த் தோழன் விட்டுச்சென்றதோ?
 
"எதுவேண்டுமானாலும் வாங்கிக்கோ" என்று
தாத்தா பாட்டி சேர்ந்து கொடுத்ததோ?
 
பிறந்தநாள் பரிசு வாங்க மறந்ததற்காய்
"என் நினைவாய் எப்பொழுதுமே வைத்திரு" என்று
தோழியொருத்தி அவசரமாய்த் திணித்ததோ?
 
எல்லோர் பெயரும் இருக்கவேண்டும் என்று
எல்லோரும் ஒன்றாய் இருந்த வேளையில்
நட்பு வட்டாரங்கள் கூடிக் கையொப்பமிட்டதோ?
 
முதல் மாச சம்பளத்தின் அடையாள மிச்சமோ?
 
அவசரத்தேவைக்கு உதவும் என்று
பத்திரப்படுத்தி வைத்ததோ?
 
எது எப்படியிருந்தாலும்
 
கண்ணெதிரே அடிபட்டுக் கிடக்கும்
முகந்தெரியா நண்பருக்காகவோ,
 
தாளாத பசியில் தளர்ந்திருக்கும் முதியவரின்
யானைப்பசிக்கு சோளப்பொறியாகவோ,
 
பள்ளிசெல்லும் குழந்தையின்
கட்டணத்தொகையில் ஒரு பகுதியாகவோ
 
முழுமனத்தோடு செலவழிக்கையில்
முன்னைக்கிப்போது புனிதமடைகிறது
பணப்பையில் பத்திரப்படுத்தப் பட்டதாய்
எண்ணிப் பக்குவமாய்ச் சிரிக்கும்
ஒரு நூறு ரூபாய்த் தாள்!
 
ஒவ்வொரு உறவுகளுடனான
சந்திப்பும் புதுப்பிக்கப்படட்டும்
புது ரூபாய்த் தாளுடன்...
 
இப்படியாய் சில ரூபாய்கள் எப்பொழுதும்
இருக்கட்டும் நம்மிடையே....
 
வாழ்க உறவுகள்!
வளர்க உதவிகள்!
 

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 8/21/2007 04:54:00 PM, |

8 பின்னூட்டங்கள்:

  At Wednesday, August 22, 2007 12:46:00 PM Blogger Sumathi. நவின்றது:
ஹாய்,

//இப்படியாய் சில ரூபாய்கள் எப்பொழுதும்
இருக்கட்டும் நம்மிடையே....//

ஆமாம்.. இது போல என் கிட்டயும் சில ருபாய்கள் இருக்கிறது.நினைத்துப் பார்க்க..
100 roopa note'a vechu..Ipdi kooda eluthalama! :)
@sumathi,

//ஆமாம்.. இது போல என் கிட்டயும் சில ருபாய்கள் இருக்கிறது.நினைத்துப் பார்க்க.. //

நன்றி சுமதி.

அப்படியா? மிக்க மகிழ்ச்சி!!
@ponnarasi,

நன்றி வழக்கம் போல!

//100 roopa note'a vechu..Ipdi kooda eluthalama! :) //

இப்படியும் இருக்கலாமே!! ;‍)
  At Saturday, September 01, 2007 2:10:00 PM Blogger Unknown நவின்றது:
dei super da....gud imagination da. i like this very very much....
@Santa,

//dei super da....gud imagination da. i like this very very much....//

Thank you so much da.
  At Tuesday, October 02, 2007 7:11:00 PM Anonymous Anonymous நவின்றது:
Very nice

"பணப்பையில் பத்திரப்படுத்தப் பட்டதாய் எண்ணிப் பக்குவமாய்ச் சிரிக்கும் ஒரு நூறு ரூபாய்த் தாள்"

i think.. indha idathulaye kavithaiyai mudichirundha innum azhaga ah irundhirukkum.
@geetha,

//Very nice//

உங்கள் வரவு நல்வரவாயிற்று. நன்றி :)

//i think.. indha idathulaye kavithaiyai mudichirundha innum azhaga ah irundhirukkum.//

நானும் அப்படியே தான் நினைத்தேன். ஆனாலும் இன்னும் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டுமே அதனால் தான் சேர்த்தேன்.

எனினும் கவனமாகக் கருத்திற்கொள்கிறேன். நன்றி.