Friday, April 27, 2007

அறிவுமதியின் நட்புக்காலம் - 1

கவிஞர் அறிவுமதியின் 'நட்புக்காலம்' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே.

அறிவுமதி நல்ல பாடலாசிரியரும் கூட. உதாரணத்திற்கு அவர் எழுதிய சில திரைப்படப் பாடல்கள் (எனக்குப் பிடித்தவை).

இளவேனிற்காலப் பஞ்சமி - 'மனம் விரும்புதே உன்னை' படத்தில்
பிரிவொன்றை சந்தித்தேன் - 'பிரியாத மனம் வேண்டும்' படத்தில்
காஞ்சிப்பட்டு சேலைகட்டி - 'ரெட்டை ஜடை வயசு' படத்தில்


(அட எல்லாப்பாட்டுக்களுமே ஹரிஹரன் பாடுனதுங்க ;-). அதுவும் அவரு மட்டுமே பாடுனது! என்ன ஒற்றுமை!)


இப்பொழுது கவிதைகளுக்குச் செல்வோமே......



நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதால் தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை...!


*

நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள் நீ!


*

நம்மைப் பற்றிய
ஆசிரியர்களின் சந்தேகங்களுக்குத்
துணையாய்ப் புத்தகங்களைப்
படபடக்கச் சொல்லிவிட்டு
நிதானமாய்ப் பேசிக்கொண்டிருந்தோம்
நாம்!


*

தாய்ப்பாலுக்கான விதை
காதலில் இருக்கிறது!
தாய்மைக்கான விதை
நட்பில் இருக்கிறது!


*

போகிற இடத்தில்
என்னை விட
அழகாய், அறிவாய்
ஒருவன் இருந்துவிடுவானோ
என்ற பயம்
நல்லவேளை
நட்பிற்கு இல்லை!

Labels: , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/27/2007 02:08:00 PM, |

2 பின்னூட்டங்கள்:

  At Friday, April 27, 2007 5:53:00 PM Blogger SHRIE நவின்றது:
கவிதைகள் அருமை ராகவன்!
நல்ல ரசனை! எதோ நேரம் கிடைக்கும்போது வருவேன். அதுக்காக sridhar full time working on wordpress ? லாம் கேக்காதிங்க. :)
@shrie,

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்ரீதர்.. நீங்கள் தானா அந்த Shrie? எனக்குத் தெரியாது.

அது சும்மா தமாசுக்கு..ஹி ஹி ஹி..;-) தப்பா எடுத்துக்காதிங்க..!!

நேரம் கிடைக்கும் போது அப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வந்துட்டுப் போங்க..