Tuesday, April 24, 2007
காதலின் மகத்துவம்
நீ உடுத்திவரும்
உடையின் நிறமே
எனக்கு அந்தந்த
தினத்தின் உகந்த நிறமாகிறது!
*
உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,
மின்னஞ்சல்கள் அவமதிப்பு,
குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!
*
'நீயில்லாத பொழுதுகளில்' என்ற
தலைப்பைக் கொடுத்து என்னை ஒரு
கவிதை எழுதச் சொன்னாய்!
எழுதிய கவிதையை நீ வாங்கிப்
பருகியதும் பல்கிப்பெருகியது நம் காதல்..
வெள்ளைத்தாளில் வெள்ளேந்தியாய்ச்
சிரித்தது ஒரு முற்றுப்புள்ளி!!
*
என் நினைவுகள் கலக்காமல்
உன் கவிதை எப்படியிருக்கும்? - நீ!
"கலப்படமில்லாமல் நான் - உன்
நினைவுகளை உள்வாங்கும் முன்!
சர்க்கரையாய் நீ எனக்குள்!
பாயாசமாய் நம் காதல்" - நான்!
ஊறுகாயாய் உன் பூக்கோபம்!
புளிப்பாய் உன் உதட்டுச்சுழிவு!
அறுசுவை உணவு ஆரம்பம் எனக்கு!
உடையின் நிறமே
எனக்கு அந்தந்த
தினத்தின் உகந்த நிறமாகிறது!
*
உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,
மின்னஞ்சல்கள் அவமதிப்பு,
குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!
*
'நீயில்லாத பொழுதுகளில்' என்ற
தலைப்பைக் கொடுத்து என்னை ஒரு
கவிதை எழுதச் சொன்னாய்!
எழுதிய கவிதையை நீ வாங்கிப்
பருகியதும் பல்கிப்பெருகியது நம் காதல்..
வெள்ளைத்தாளில் வெள்ளேந்தியாய்ச்
சிரித்தது ஒரு முற்றுப்புள்ளி!!
*
என் நினைவுகள் கலக்காமல்
உன் கவிதை எப்படியிருக்கும்? - நீ!
"கலப்படமில்லாமல் நான் - உன்
நினைவுகளை உள்வாங்கும் முன்!
சர்க்கரையாய் நீ எனக்குள்!
பாயாசமாய் நம் காதல்" - நான்!
ஊறுகாயாய் உன் பூக்கோபம்!
புளிப்பாய் உன் உதட்டுச்சுழிவு!
அறுசுவை உணவு ஆரம்பம் எனக்கு!
Labels: காதல்
6 பின்னூட்டங்கள்:
@Pradeep,
நன்றி உங்கள் நினைவூட்டலுக்கு. நானே திருத்தவேண்டும் என்று நினைத்திருந்தேன்..
ஏற்கெனவே உள்ள பதிவின் தலைப்பு உலாவியில் தேங்கியிருந்ததால் (Cached in Browser) தட்டச்சும் அவசரத்தில் Tab Button ஐத் தட்டிய காரணத்தினால் அதுவே இதற்கும் தலைப்பாயிற்று.
இப்பொழுது சரியாயிருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்தலுக்கும்!

Good nice ones. Very much enjoyed
//என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!//
அருமையான வரிகள்.....
//வெள்ளைத்தாளில் வெள்ளேந்தியாய்ச்
சிரித்தது ஒரு முற்றுப்புள்ளி!!//
அழகா முடிச்சிருக்கீங்க ராகவன்.
காதலைப் பத்தி எழுத உக்காந்தா மட்டும், அப்படியே பொங்கிட்டு வருது போல? கலக்குங்க.

@Anonymous,
வருகைக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!
வருகைக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!
@Nandha,
//அழகா முடிச்சிருக்கீங்க ராகவன்.//
நன்றி நந்தா.
//காதலைப் பத்தி எழுத உக்காந்தா மட்டும், அப்படியே பொங்கிட்டு வருது போல? கலக்குங்க. //
எனக்கு மட்டுமா நந்தா? ;-) நன்றி கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும்.
//அழகா முடிச்சிருக்கீங்க ராகவன்.//
நன்றி நந்தா.
//காதலைப் பத்தி எழுத உக்காந்தா மட்டும், அப்படியே பொங்கிட்டு வருது போல? கலக்குங்க. //
எனக்கு மட்டுமா நந்தா? ;-) நன்றி கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும்.
thavaraaga eduthuk kollatheergal, hiku kavithayin ilakkanangalai muthalil thaangal padikka vendum.
vazthukkal!