Friday, April 20, 2007

அறிவான அழகு

 
நீ அமர்ந்து எழும்
ஒவ்வொரு ஆசனத்திலும்
உன் அழகு அங்கேயே
தங்கி விடுகிறதே என்ற
விசனத்தில் நானிருந்தேன்!
 
என்னை விடுத்து வேறு
எவரும் தன்மீது அமர
அனுமதிக்காது உன்
பின்னோடே வரப்
பழக்கியிருக்கிறாய் என்பது
பிறகு தான் புரிந்தது!!
 
உன்னைப் போலவே
உன் அழகும் அறிவானது!
 

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 4/20/2007 11:18:00 AM, |

6 பின்னூட்டங்கள்:

நல்லா இருக்கு காதலுங்ற வார்த்தை இல்லாம காதல் பத்தின கவிதை.... ம் ம் ம் அற்புதம்

என்னை விடுத்து வேறு
எவரும் தன்மீது அமர
அனுமதிக்காது உன்
பின்னோடே வரப்
பழக்கியிருக்கிறாய் என்பது
பிறகு தான் புரிந்தது!!

கொஞ்சம் சுத்தி வளைக்குது...
@Iniyal,

//நல்லா இருக்கு காதலுங்ற வார்த்தை இல்லாம காதல் பத்தின கவிதை.... ம் ம் ம் அற்புதம்//

அட.. ஆமாம்!! நன்றிங்க...

//கொஞ்சம் சுத்தி வளைக்குது... //

எங்கே இனியாள்? எனக்கு அப்படித் தெரியவில்லையே. விளக்கிச் சொல்லுங்கள்.. விளக்கம் சொல்லுகிறேன்.
கலக்கறீங்க. கவிதை படம் காமிக்குது.

//உன்னைப் போலவே உன் அழகும் அறிவானது! //

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!

இந்த word verification முதல்ல எடுங்க.
@Nandha,

நன்றி நந்தா..

//கவிதை படம் காமிக்குது//

எங்கே எனக்குத் தெரியாமலேயே? ;-)

//எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!//

ஒக்காந்து யோசிப்பாங்களோன்னு வடிவேலு பாணியில கேக்கறீங்களா?

//இந்த word verification முதல்ல எடுங்க.//

முன்பு ஒருமுறை இதை சில அனானி கருத்துக்களுக்காக வைத்திருந்தேன். இப்பொழுது எடுத்துவிடுகிறேன் நந்தா.
  At Tuesday, April 24, 2007 12:51:00 PM Anonymous Anonymous நவின்றது:
மிகவும் அனுபவித்து எழுதுகிறீர்கள்.
அர்த்தமுள்ள வரிகள் கைகோர்த்துள்ளன.
@amudhan,

நன்றி அமுதன் உங்கள் வருகைக்கு.

//மிகவும் அனுபவித்து எழுதுகிறீர்கள்//

வேற என்னங்க பண்றது? ஏதோ முடிஞ்ச அளவுக்கு அனுபவிக்கலாமேன்னு தான்..

//அர்த்தமுள்ள வரிகள் கைகோர்த்துள்ளன. //

நன்றி அமுதன்.