Thursday, January 10, 2008

பூக்களில் உறங்கும் மெளனங்கள்
புரிந்து கொள்ளாத பூவையர்
பற்றிய புலம்பல்கள்

கண்டு கொள்ளாத காளையர்
பற்றிய கவலைகள்

படிப்பைத் துறக்க வைக்கும்
தொழிலின் மீதான வருத்தங்கள்

கடைசி நேரத்தில் பயணச்சீட்டினை
ரத்து செய்யும் நிர்ப்பந்தங்கள்

தவறாகப் புரிந்து கொண்டதற்காய்
விரிசல் விட்ட உறவின் விசும்பல்கள்

தவிர்க்கப்பட்ட காரணத்தால் தயங்கி
நிற்கும் பெற்றோர்களின் தவிப்புகள்

விதியின் வசமென விலகி நின்று
விட்டுவிட்ட சந்தர்ப்பங்களின் ஆற்றாமைகள்

எழுதப்பட்ட நபரைத் தவிர அனைவருக்கும்
புரிந்த கவிதையின் மீதான கழிவிரக்கங்கள்

திறமைகளின் வீரியங்களைச் சமயத்தில்
நட்பிற்காய் விட்டுக்கொடுத்த பெருமிதங்கள்

நெருக்கங்கள் நிறைய இருந்தும்
பந்தங்களைச் சுணக்கிய தயக்கங்கள்

மெய்வருத்தக் கூலியும் பொய்யாகிப்
போகுங்கால் வெளிவரும் விரக்திகள்

உள்ளத்தின் உணர்வுகளை உள்ளேயே
பொத்தி வைத்து உருகும் உளறல்கள்

யாரென்றே தெரியாத தருணங்களிலும்
இடர்கண்டு இளகும் இதயங்களின் இணக்கங்கள்

வெகுகாலம் பிரிந்திருந்து சந்திக்கையில்
கணப்பொழுதில் ஊற்றெடுக்கும் உற்சாகங்கள்

தீர்மானிக்கப்படாமல் சுமத்தப்பட்ட பழியையும்
தெளிவோடு ஏற்கும் தியாகங்கள்

இருக்கும் காலம்வரை இறுகியிருந்தும்
பிரியும் பொழுதினில் இளகும் பெருமூச்சுக்கள்

எங்கிருந்தாலும் நல்லாயிரு என்று மட்டும்
வாழ்த்தும் தாயுள்ளங்களின் நெகிழ்வுகள்

இப்படிப் பலவாறாய் மாந்தர் வெளியிடும்
உணர்வுக் கதம்பத்தினை உள்வாங்கியும்
தன்கடன் பணிசெய்து கிடப்பதாய்ப்
புன்னகையோடு பூத்துக்குலுங்கும்
பூக்களில் உறங்கும் மெளனங்கள்..குறிப்பு: இக்கவிதை சிறில் அலெக்ஸ் நடத்தும் "நச்" கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.


நன்றி: சக வலைப்பதிவர் வேதாவிற்கு.

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 1/10/2008 06:49:00 PM, |

15 பின்னூட்டங்கள்:

மாந்தர் வெளியிடும் உணர்வுக் கதம்பங்கள் அருமை. எத்தனை எத்தனை. இத்தனையையும் உள் வாங்கியும் தன் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற கொள்கையுடன் மௌனமாக உறங்கும் பூக்கள்.
ம்ம்ம் - என்ன சொல்வது

வாழ்த்துகள்
@Cheena (சீனா),

தங்கள் வரவு நல்வரவாயிற்று!

//ம்ம்ம் - என்ன சொல்வது

வாழ்த்துகள்//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சீனா!

அடிக்கடி வாங்க! :)
கவிதையின் எல்லா வரிகளோடும் என்னை ஒப்பிட்டுக் கொள்ள முடிகிறது பெண்களின் உணர்வுகள் பூக்களில் உறங்கும் மெளனங்கள் :)

/எழுதப்பட்ட நபரைத் தவிர அனைவருக்கும்புரிந்த கவிதையின் மீதான கழிவிரக்கங்கள்/
ரொம்ப அருமை :)
வாழ்த்துக்கள் :) அதென்ன எனக்கு போய் நன்றி சொல்லியிருக்கீங்க? :)
@வேதா,

வருக வருக!

//கவிதையின் எல்லா வரிகளோடும் என்னை ஒப்பிட்டுக் கொள்ள முடிகிறது பெண்களின் உணர்வுகள் பூக்களில் உறங்கும் மெளனங்கள் :)//

நன்றி வேதா!

//அதென்ன எனக்கு போய் நன்றி சொல்லியிருக்கீங்க? :)//

அதாவது உங்க வலைப்பூவில் தான் நான் இந்தப் போட்டியைப் பற்றி அறிந்து கொண்டேன். அதனால் தான். :)
அடடே, நீங்களுமா? வாழ்த்துக்கள் ராகவன் :)
@பிரேம்குமார்,

வாங்க தலைவா! :)

//அடடே, நீங்களுமா?//

இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைன்னு தானே கேக்கறீங்க? :)

வாழ்த்துக்களுக்கு நன்றி பிரேம் :)
  At Monday, January 14, 2008 2:53:00 AM Blogger priya நவின்றது:
Too good. Each line depicts its character.
@priya,

//Too good. Each line depicts its character//

நன்றி பிரியா! சரியாகச் சொன்னீர்கள்.
  At Wednesday, February 06, 2008 11:50:00 AM Blogger Divya நவின்றது:
Crawled in here from Premkumar's page, xlnt lines in your 'kavithai'.....really admired ur skill, keep rocking Raghavan!!
@திவ்யா,

வருக வருக! உங்கள் வரவு நல்வரவாயிற்று தோழி!

//xlnt lines in your 'kavithai'.....really admired ur skill, keep rocking Raghavan!!//

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு நன்றி திவ்யா.

அடிக்கடி வாங்க. :)
  At Tuesday, December 01, 2009 3:56:00 PM Blogger panneer நவின்றது:
NO MORE WORDS TO SAY RAGAVEN
@panner,

நன்றி பன்னீர் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

//NO MORE WORDS TO SAY RAGAVEN//

நிச்சயம் நீங்கள் கவிதையை உள்வாங்கி ரசித்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் இந்த வரியின் மூலம். நன்றி.
  At Wednesday, September 01, 2010 1:24:00 PM Anonymous Dharma நவின்றது:
Nee ennidam vaarthaigalil pagirndhadhai kavidhaiyai vadithirukiraai ...
un kadan pani seidhu kidappadhe:)
Keep going dear :)
I can relate every line to me too :)
  At Wednesday, September 01, 2010 1:24:00 PM Anonymous Dharma நவின்றது:
Nee ennidam vaarthaigalil pagirndhadhai kavidhaiyai vadithirukiraai ...
un kadan pani seidhu kidappadhe:)
Keep going dear :)
I can relate every line to me too :)
@Dharmalakshmi,

மிக்க மகிழ்ச்சி. என் கடன் பணி செய்து கிடப்பதே :)

காலந்தாழ்ந்த என் கருத்துக்கு மன்னிக்கவும்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.