Wednesday, December 13, 2006
ஜென்மபந்தம்
உனக்கு எத்தனை முறை
எடுத்தியம்புவது?
இப்படி வரைமுறையில்லாமல்
குறும்பு செய்வது நல்லதல்ல என்று?
சோதிக்கப் பிறந்தவள் நீ!
உன்னால் சோதிக்கப்படுவதற்காகவே
பிறந்தவன் நான்!
உன் ஆய்வின் முடிவு
எப்போது நிகழும்?
என் ஆவி அடங்கிய பிறகா?
உலையில் இருக்கும் நேரம்
அதிகரிக்க இறுகுமாம் இரும்பு!
உன் பாச அலையில் அமிழும் நேரம்
அதிகரிக்க மென்மையாவேன் நான்!
என் ஒட்டுமொத்த ஆண்மைத்திமிரையும்
அரையங்குலப் பார்வையில்
அஸ்தமனம் செய்து விட்டாய்!
இந்த ஜென்மத்தில் உன்
காதலை என்னால் ஜெயிக்க முடியாது!
இருக்கவே இருக்கிறதாமே
ஏழு ஜென்மங்கள்..
நான் நானாகவே பிறக்க வேண்டும்
உன் காதல் நினைவுகளை மட்டும்
மறு ஜென்மத்திற்கு எடுத்துக்கொண்டு..
காதல் ஒரு பழிவாங்கும் படலமில்லை!
இருப்பினும் உன்னை அடுத்தடுத்த
ஜென்மங்களில் அழகழகாய்க்
காதலிம்சைப் படுத்துவேன் காதலியே...
ஜென்மங்களின் மீதான என்
ஒவ்வாமையை ஒதுக்கிவைக்கிறது காதல்!
எடுத்தியம்புவது?
இப்படி வரைமுறையில்லாமல்
குறும்பு செய்வது நல்லதல்ல என்று?
சோதிக்கப் பிறந்தவள் நீ!
உன்னால் சோதிக்கப்படுவதற்காகவே
பிறந்தவன் நான்!
உன் ஆய்வின் முடிவு
எப்போது நிகழும்?
என் ஆவி அடங்கிய பிறகா?
உலையில் இருக்கும் நேரம்
அதிகரிக்க இறுகுமாம் இரும்பு!
உன் பாச அலையில் அமிழும் நேரம்
அதிகரிக்க மென்மையாவேன் நான்!
என் ஒட்டுமொத்த ஆண்மைத்திமிரையும்
அரையங்குலப் பார்வையில்
அஸ்தமனம் செய்து விட்டாய்!
இந்த ஜென்மத்தில் உன்
காதலை என்னால் ஜெயிக்க முடியாது!
இருக்கவே இருக்கிறதாமே
ஏழு ஜென்மங்கள்..
நான் நானாகவே பிறக்க வேண்டும்
உன் காதல் நினைவுகளை மட்டும்
மறு ஜென்மத்திற்கு எடுத்துக்கொண்டு..
காதல் ஒரு பழிவாங்கும் படலமில்லை!
இருப்பினும் உன்னை அடுத்தடுத்த
ஜென்மங்களில் அழகழகாய்க்
காதலிம்சைப் படுத்துவேன் காதலியே...
ஜென்மங்களின் மீதான என்
ஒவ்வாமையை ஒதுக்கிவைக்கிறது காதல்!
Labels: காதல்
11 பின்னூட்டங்கள்:
« முதல் பக்கத்திற்குச் செல்ல | Post a Comment
சார், ரொம்ப அற்புதம்.
வருக உமாபதி..
நன்றி உமாபதி வருகைக்கும் தருகைக்கும்.. இளநிலை எழுத்தரா? அடடே..பணி எப்படி உள்ளது?
புதுவை வாழ்க்கை முறையும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்...
நன்றி உமாபதி வருகைக்கும் தருகைக்கும்.. இளநிலை எழுத்தரா? அடடே..பணி எப்படி உள்ளது?
புதுவை வாழ்க்கை முறையும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்...
nalla kavithai...kadhal enralee sothanai thanaa? etharkaga ethanai kadhaliyen sothanaikal? ennaku puriyeala..ungaluku therinchaa koncham sollungalean...
Deiiiiiiiiiiiiiiii……………..Enakku enna solradhunne therila…………….Simplyyyyyyyyyyyy superb da kuttyyyyyyyyyy………………….Enakku indha kavidhai romba romba pidichurukuuuuuuuuuuu…………..Chance a illa :-) Good job da……………..;)
-Archana Muralidharan
-Archana Muralidharan
நன்றி சீனு வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..
காதலின் சோதனைகள் ஒரு அங்கம் தோழரே.. அதனைத் துய்ப்பது அவரவர்க்கு எழுதிய பாக்கியம்! அவ்வளவே...
காதலின் சோதனைகள் ஒரு அங்கம் தோழரே.. அதனைத் துய்ப்பது அவரவர்க்கு எழுதிய பாக்கியம்! அவ்வளவே...
நன்றி அர்ச்சனா வருகைக்கும் தருகைக்கும்.
ரொம்ப நல்லயிருக்கு இராகவன் ... அருமை ... வாழ்த்துக்கள் ...
உங்கள் கவிதையை படிக்கும் போது முன்பு நான் எழுதிய வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது ...
".... முன்னொரு ஜென்மத்தில்
உனக்காக காத்திருப்பது
சுகம் என்றேன் - உண்மைதான்
அதற்க்காக இன்னும்
எத்தனை ஜென்மங்கள் ....."
./பழனி
உங்கள் கவிதையை படிக்கும் போது முன்பு நான் எழுதிய வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது ...
".... முன்னொரு ஜென்மத்தில்
உனக்காக காத்திருப்பது
சுகம் என்றேன் - உண்மைதான்
அதற்க்காக இன்னும்
எத்தனை ஜென்மங்கள் ....."
./பழனி
நன்றி பழனி வருகைக்கும் பின்னூட்டப்பதிவுக்கும்..
நல்ல வரிகள் உங்களுடையதும்.... ஏக்கத்தோடு உங்கள் ஆற்றாமையை வெளிக்காட்டியிருப்பது அழகு!
நல்ல வரிகள் உங்களுடையதும்.... ஏக்கத்தோடு உங்கள் ஆற்றாமையை வெளிக்காட்டியிருப்பது அழகு!
/என் ஒட்டுமொத்த ஆண்மைத்திமிரையும்
அரையங்குலப் பார்வையில்
அஸ்தமனம் செய்து விட்டாய்!/
உன்னதமான வரிகள். உங்களுடைய எல்லா கவிதக்ளுமே அருமையாக இருந்தது.
மிகவும் ரசித்துப் படித்தேன்.
அரையங்குலப் பார்வையில்
அஸ்தமனம் செய்து விட்டாய்!/
உன்னதமான வரிகள். உங்களுடைய எல்லா கவிதக்ளுமே அருமையாக இருந்தது.
மிகவும் ரசித்துப் படித்தேன்.
@நந்தா,
வணக்கம். தங்கள் வரவு நல்வரவாயிற்று..
நன்றி நண்பரே...
வணக்கம். தங்கள் வரவு நல்வரவாயிற்று..
நன்றி நண்பரே...
//என் ஒட்டுமொத்த ஆண்மைத்திமிரையும்
அரையங்குலப் பார்வையில்
அஸ்தமனம் செய்து விட்டாய்!//
loved this... :)
அரையங்குலப் பார்வையில்
அஸ்தமனம் செய்து விட்டாய்!//
loved this... :)