Thursday, November 08, 2007
கனாக் காணும் காலங்கள் - 1
கதையின் முன்னுரையாய் என்னுரை இங்கே.
"விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே"
கணீரென்று ஒலித்த சீர்காழியின் குரல் அதிகாலை வேளையில் அங்கிருந்த 'சோவாரிப் பிள்ளையார்' கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும் மேலும் சுறுசுறுப்பாக்கியிருந்தது! காரைக்குடியில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் இந்தச் சோவாரிப் பிள்ளையாருக்குத் தனிப் பெருமை தான்.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு மக்கள் வெள்ளம் அலைமோதியது கோவிலில். அர்ச்சகர் தன் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தார். அவரைப் பொறுத்த மட்டிலும் எல்லா நாளையும் போலவே இதுவும் ஒரு நாள். ஏனெனில் அவர் கடன் பணி செய்து கிடப்பதே! தீபாவளி அன்றாவது தரிசிக்க வரும் பக்தர்களைப் போலல்லாது, எல்லா நாளும் அவர் பிள்ளையாருடன் மிக இணக்கமாய்ப் பேசுபவராயிற்றே.
தினசரி வரவியலாத போதிலும் கண்டிப்பாக அடிக்கொரு தரம் வந்து அமைதியாகவும், மிக ஆழமாகவும் வணங்கி விட்டுச் செல்லும் இன்பராஜன் அன்றும் அவர் கண்ணில் தென்பட்டான். சரி அவனுடைய முறை வரும் போது பேசிக் கொள்ளலாம் என்று ஆரத்தித் தட்டை அதற்குரிய இடத்தில் வைத்து, தட்டின் மேலிருந்த கிண்ணத்தில் இருந்து விபூதி வழங்க ஆரம்பித்தார் அர்ச்சகர்.
காற்றில் கரைந்த கானமும், கற்பூரத்தின் மணமும், விபூதியின் சுகந்தமும் அனைவரையும் ஒரு பரவச நிலையில் ஆழ்த்தியிருக்க, தன் முறை வந்ததும் தன் வழக்கமான புன்னகை ஒன்றையும் காணிக்கையாக உதிர்த்தான் இன்பராஜன்.
"என்ன தம்பி நல்லா இருக்கீங்களா? கொஞ்ச நாளாச்சே பாத்து" என்று அக்கறையுடன் விசாரித்தார் அர்ச்சகர்.
பிள்ளையாருடன் மனதால் பேசி முடித்த இன்பராஜன், அர்ச்சகரிடம் வாயால் பேசினான். "நல்லா இருக்கேன் சாமி.. ஆமா கொஞ்ச நாளா மாமா வீட்டுக்குப் போயிருந்தேன் லீவுங்கிறதால.. நீங்க நல்லா இருக்கீங்களா?" என்று வழக்கமான குசலம் விசாரிப்பினை முடித்து விட்டு, "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என்று சொல்லி பிள்ளையாருக்கு மூன்று தோப்புக்கரணங்களைப் போட்டு முடித்தான்.
"சந்தோஷம். நன்றி தம்பி. உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தம்பி அடுத்தாப்புல என்ன பண்றதா உத்தேசம்?" என்று கேட்டார்.
"ஆமாம் சாமி! இந்த வருஷம் பிளஸ் டூ முடியுது. அடுத்தாப்புல MBBS படிக்கலாம்னு இருக்கேன்" என்று சொல்லி விட்டு "நான் வர்றேங்க" என்ற படி பிரகாரம் சுற்றப் போனான்.
"ரொம்ப நல்லது தம்பி! ஆண்டவன் அனுக்கிரஹம் உங்களுக்கு எப்பவும் இருக்கட்டும். நல்லாப் படிங்க தம்பி! வீட்டுல அப்பா,அம்மாவைக் கேட்டதா சொல்லுங்க" என்று கூறி விட்டு வரிசையில் நின்றிருந்த அடுத்த பக்தருக்கு ஏதுவாக ஆரத்தியில் ஒரு கற்பூரத்தை எடுத்துப் போட்டார்.
அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளையார் அவர் பங்குக்கு ஒரு புன்னகையைப் பிரசாதமாகத் தவழ விட்டார்.
சில சமயங்களில் வார்த்தைகளுக்கே அர்த்தம் விளங்காத பொழுது, புன்னகை மட்டும் என்ன விதிவிலக்கா?
ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும் அந்த ஒற்றைப் புன்னகையில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளன!
போகப் போகப் புரியும் புன்னகையின் புனிதம்....
(தொடரும்....)

Labels: கதை, கனாக் காணும் காலங்கள், தொடர்கதை
19 பின்னூட்டங்கள்:
« முதல் பக்கத்திற்குச் செல்ல | Post a Comment
தீபவொளித் திருநாள்ள தொடங்கீருக்கீங்க. கதை இப்பத்தானே தொடங்கீருக்கு. போகப் போகத் தெரியும்..கதையின் போக்கு புரியும்.
@g.ragavan,
//தீபவொளித் திருநாள்ள தொடங்கீருக்கீங்க. கதை இப்பத்தானே தொடங்கீருக்கு. போகப் போகத் தெரியும்..கதையின் போக்கு புரியும்.//
நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
உங்கள் ஆதரவோடு..

Romba arumiya aarambichu irrukeenga... congrats....
:) Great effort! Its nt easy 2 write this story athuvum thamizhla! :)
@dinesh loganathan,
வா தம்பி.. வா! உனது வரவு நல்வரவாயிற்று.
//Romba arumiya aarambichu irrukeenga... congrats....//
நன்றி உனது வாழ்த்துக்களுக்கும் கருத்துப்பதிவுக்கும்!

@ponnarasi,
//:) //
ஆரம்பமே புன்னகையோடு தான்! அதுனால திட்டு எதுவும் விழாதுன்னு தெரிஞ்சு போச்சேய்ய்... :)
//Great effort! Its nt easy 2 write this story athuvum thamizhla! :)//
நன்றி பொன்னரசி. ஆனால் உங்க அளவுக்கு வருமான்னு தெரியலியே.. பார்ப்போம்...
நல்லா எழுதணும்னு ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போங்கம்மோய்...

//
பிள்ளையாருடன் மனதால் பேசி முடித்த இன்பராஜன், அர்ச்சகரிடம் வாயால் பேசினான்
//
Nice Lines Keep it Up ;)

@priya,
welcome after a long back!1
//Nice Lines Keep it Up ;)//
நன்றி பிரியா.
welcome after a long back!1
//Nice Lines Keep it Up ;)//
நன்றி பிரியா.
Raghav அண்ணா,
நல்ல தொடக்கம் .... ஆனால் ஏன்? என் பெயர் ?
How many time did I tell,before u had started ?
Any ThankS

@Inbarajan,
//Raghav அண்ணா,
நல்ல தொடக்கம் .... ஆனால் ஏன்? என் பெயர் ?//
நன்றி தம்பி. உன் பெயர்..அதற்கான அறிவிப்பும் காரணமும் கதைக்கு சுபம் போட்டபின் அறிவிக்கப்படும் :)
//How many time did I tell,before u had started ?
Any ThankS//
Its all in the game dear! Be happy!
Cheers! :)

Good start da.. U explain clearly thought by thought.. Excellent effort.
While reading ur words i feel the scene lively.. Good start..
Keep posting the story before we forget the link.. :))

@vg,
//Good start da.. U explain clearly thought by thought.. Excellent effort.//
நன்றி விஜி.
//While reading ur words i feel the scene lively.. Good start.. //
மகிழ்ச்சி எனக்கும்.
//Keep posting the story before we forget the link.. :))//
இது புரியலையே! ?

I mean to say keep posting the remaining story soon, so that we will not forget the story linking.. ;)

//I mean to say keep posting the remaining story soon, so that we will not forget the story linking.. ;)//
நன்றி. :) கண்டிப்பா.

Very gud start da:o)Un kadhai melum melum valara yen vazhthukal..remba late pannama kadhaiya continue pannanum...ok va:o)?
@Santa,
//Very gud start da:o)//
நன்றி நண்பா.
//Un kadhai melum melum valara yen vazhthukal..remba late pannama kadhaiya continue pannanum...ok va:o)?//
நிச்சயம் முயல்கிறேன் தோழா. உங்கள் அனைவரின் ஆசிகளோடு...

raghava.. kalakara po.. romba nanna iruku..
athuvum pillaiyaar sirikara idathula.. oru suspense vecha paaru... soopero sooper...

@anonymous,
வருக வருக!
//raghava.. kalakara po.. romba nanna iruku.. //
நன்றி.
//athuvum pillaiyaar sirikara idathula.. oru suspense vecha paaru... soopero sooper...//
மிக்க மகிழ்ச்சி! :) ஆனா நீங்க யாருன்னு கடைசி வரை சொல்லவே இல்லையே! :(
அடுத்த அத்தியாயங்களையும் தொடர்ந்து பாருங்க.

Bet365 Casino & Hotel - Goyang County
Bet365 is a 스포츠 분석 사이트 gambling company based in New York 검증 사이트 City, and 벳 365 우회 주소 has been operating since 2008. Gambling operator Bet365 세븐포커 and its 10bet sister sites,