Thursday, October 18, 2007

பிரதிநிதிகள்

ஒரு வேளை உணவுக்காக
இரு வேளைகள் காக்கவைத்த
வயிற்றுக்குக், காசு இல்லாவிட்டாலும்
கருணையோடு சோறுபோட்ட
உணவக முதலாளியும்,


அடுத்தடுத்து இருந்தாலும்
பார்வைகளைக் கூடத்
தடுக்கப் பழகிவிட்ட
அண்டைவீடுகளின் மத்தியில்
உடல்நிலை சரியில்லாத பொழுதினில்
பாசத்தோடு வெந்நீர் வைத்துப்
பரிவாக விசாரித்தனுப்பும்
தேநீர்க் கடைக்காரரும்,


எனக்கென்ன என்று
வேடிக்கை பார்ப்பவர்களை
எரிச்சலோடு ஏறிட்டு
ஆபத்தில் இருப்பவரை
எதிரேவந்த ஆட்டோவில்
ஏற்றி, "சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு
போப்ப்பா" என்று தன்
கடமைகளுக்குத் தற்காலிக
விடுப்புத் தரும் தந்தை தெரசாக்களும்,


அறிமுகமாகிச் சில மாதங்களே
ஆனாலும் கட்டாயத்தின் பூச்சுகள்
கடுகளவும் இல்லாது சிநேகத்தின்
வழியாய்த் தாய்மை காட்டும்
அறைவாசிகளும்,


அள்ளி இறைப்பதற்கில்லை என்று
தள்ளி நிற்காமல் தன்னிறைவோடு
கிள்ளிக் கொடுக்கமுடியும் என்று
சுனாமியோ, பூகம்பமோ, குண்டுவெடிப்போ,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகாரமாய்
முடிந்தவரை முகமகிழ்ச்சியோடு
முன்வந்து உதவுபவர்களும்,


"உன் வயதில் நானும் இது போல
இருந்தவன் தான்" என உள்ளுக்குள்
சொல்லிக்கொண்டாலும், கண்டிப்பின்
பேரில் காணும் போதெல்லாம்
கசக்கிப்பிழியாமல், எப்படியும்
"வாழ்க்கைத் பயணத்தில் சில
நிகழ்வு எழுதுகோல்கள் உனக்கு
அனுபவ மை ஊற்றும்" என்று
அர்த்ததோடு சிரித்து அமைதியாய்த்
தட்டிக் கொடுக்கும் அப்பாக்களும்,


சரிக்குச் சரியாய் வேலையிருந்தும்
சகதொழிலாளியின் முகத்தில்
சவுக்கியத்தின் ரேகைகள்
சலவை செய்யப்பட்டிருக்கக் கண்டு
"உன் கவலைகளுக்கும் நான் தோழன்"
என்று கனிவோடு பறைசாற்றி
உள்ளக் குமுறலை உளமாறக் கேட்கும்
உன்னதமானவர்களும்,


கண்ணெதிரே தோன்றும்
கடவுளின் பிரதிநிதிகள்!!



இவர்களை ஒருமுறை பார்த்தால்
உடனடியாய் உள்மனம் குளிரும்!
எப்பொழுது நினைத்தாலும்
தன்னிச்சையாய் உதடுகள் ஒளிரும்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 10/18/2007 08:03:00 PM, |

31 பின்னூட்டங்கள்:

  At Thursday, October 18, 2007 8:40:00 PM Blogger Unknown நவின்றது:
After reaading this,

உடனடியாய் உள்மனம் குளிரும்!
எப்பொழுது நினைத்தாலும்
தன்னிச்சையாய் உதடுகள் ஒளிரும்!

:)

Ethai aluthiyavanum kadavulin prethinini.
@ramesh,

//:)//

புன்னகையில் புரிந்துகொண்டேன் உன் உள்ளுணர்வை! :)

//Ethai aluthiyavanum kadavulin prethinini.//

அடடா.. இதற்கு உகந்தவனா என்று தெரியவில்லை. எனினும் அதற்கான முயற்சிகளில் என்றென்றும் நான்.. நன்றி நண்பா!
  At Thursday, October 18, 2007 10:51:00 PM Blogger Sumathi. நவின்றது:
ஹலோ ராகவ்,

//அறிமுகமாகிச் சில மாதங்களே
ஆனாலும் கட்டாயத்தின் பூச்சுகள்
கடுகளவும் இல்லாது சிநேகத்தின்
வழியாய்த் தாய்மை காட்டும்
அறைவாசிகளும்,//

சூப்பர் இது.
  At Thursday, October 18, 2007 10:53:00 PM Blogger Sumathi. நவின்றது:
ஹலோ,

//ஒரு வேளை உணவுக்காக
இரு வேளைகள் காக்கவைத்த
வயிற்றுக்குக், காசு இல்லாவிட்டாலும்
கருணையோடு சோறுபோட்ட
உணவக முதலாளியும்,//

அட இப்படி கூட இருக்காங்களா? யாருப்பா அந்த நல்ல மனசுக்காரன்?
  At Thursday, October 18, 2007 10:54:00 PM Blogger Sumathi. நவின்றது:
ஹலோ,

//அடுத்தடுத்து இருந்தாலும்
பார்வைகளைக் கூடத்
தடுக்கப் பழகிவிட்ட
அண்டைவீடுகளின் மத்தியில்.//

ஆஹா, இங்க தான் கொஞ்சம் உதைக்குதே...!!!
  At Thursday, October 18, 2007 10:55:00 PM Blogger Sumathi. நவின்றது:
ஹலோ,

//ஆபத்தில் இருப்பவரை
எதிரேவந்த ஆட்டோவில்
ஏற்றி, "சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு
போப்ப்பா" என்று தன்
கடமைகளுக்குத் தற்காலிக
விடுப்புத் தரும் தந்தை தெரசாக்களும்,//

simply great.must be appreciated.
  At Thursday, October 18, 2007 10:56:00 PM Blogger Sumathi. நவின்றது:
ஹலோ,

//பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகாரமாய்
முடிந்தவரை முகமகிழ்ச்சியோடு
முன்வந்து உதவுபவர்களும்,//

எப்படிப்பா இப்படிலாம்..சூப்பர்
@Sumathi,

//சூப்பர் இது.//

நன்றிங்கோ! :)
  At Thursday, October 18, 2007 10:58:00 PM Blogger Sumathi. நவின்றது:
ஹாய்,

//அர்த்ததோடு சிரித்து அமைதியாய்த்
தட்டிக் கொடுக்கும் அப்பாக்களும்,//

INTERESTING, friendly, nice.mm
@Sumathi,

அடடா..நீங்களும் நம்ம பாணியைப் பின்பற்றுவது மாதிரி இருக்கே.. வெரிகுட். சந்தோஷமா இருக்கு! :) (அதாவது ஒவ்வொரு பகுதிக்கும் பின்னூட்டம் இடுவது!)
  At Thursday, October 18, 2007 11:00:00 PM Blogger Sumathi. நவின்றது:
hai,
totally very nice to read.
@Sumathi,

//அட இப்படி கூட இருக்காங்களா? யாருப்பா அந்த நல்ல மனசுக்காரன்?//

நிச்சயமா இருக்காங்க. இது என்னுடைய முந்தைய அறைவாசியின் சொந்த அனுபவம். அவன் வேலைதேடும் பருவத்தில் அருகிருந்த ஒரு மலையாளி நாயர் உணவகம் (மெஸ்) வைத்திருந்தாராம். அவரும் சற்று இரக்கப்பட்டு சில பல சலுகைகள் செய்தாராம்.

அதனைக் கருத்திற்கொண்டேன் இக்கவிதை எழுதும் போது.

"நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை!"


நன்றி!
@Sumathi,

//ஆஹா, இங்க தான் கொஞ்சம் உதைக்குதே...!!!

என்னங்க உதைக்குது? நான் சொல்ல வந்தது நவநாகரீகத்தின் உச்சத்தில் வசதிக்கு வாழ்க்கைப்பட்ட நகர வாழ்க்கையைத் தானே ஒழிய, ஊர்க்கோடியில் ஒருவனுக்கு அடிபட்டாலோ, ஒரு துன்பம் வந்தாலோ மொத்த ஊரே இன்றும் திரண்டு கூடிவரும் கிராம வாழ்க்கையை நிச்சயமாக அல்ல என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயினும் எல்லா நகர மக்களும் அப்படி அல்ல என்பதையும் நானறிவேன். பெரும்பான்மையானோர் அப்படி இருப்பதன் தாக்கமே அவ்வரிகள்.
@Sumathi,

//simply great.must be appreciated.//

நன்றிங்கோ...
@Sumathi,

//எப்படிப்பா இப்படிலாம்..சூப்பர்//

நன்றிங்க. அனுபவித்து எழுதியது. அவ்வளவே!

முழுமனதோடு செய்யும் போது கண்டிப்பாய் இருக்கின்ற சிறு சந்தோஷமும் இரட்டிப்பாகும். இல்லையா?
@sumathi,

//INTERESTING, friendly, nice.mm//

ஆமாம்.. இன்றைய காலத்து அப்பாக்கள் பெரும்பாலும் இந்த அளவுக்குத் தம்மை வார்த்திருக்கிறார்கள் என்பது காணக் கிடைக்கின்ற நிஜம். நல்ல விஷயம் தானே!
@Sumathi,

//hai,
totally very nice to read.//

ரொம்ப நன்றி. உங்கள் பின்னூட்டத்தின் வாயிலாகவே தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி.

மீண்டும் சந்திப்போம் பிறிதொரு பதிவில்...
Aaaha..Ur writing in tamil is 2 good... :) Kavithai kettomla ;) Cha sorry padichomla! :D
@Ponnarasi,

//Aaaha..Ur writing in tamil is 2 good... :) Kavithai kettomla ;) Cha sorry padichomla! :D//

மிக்க நன்றி பொன்னரசி. மகிழ்ந்தேன்.

கேட்டவண்ணமோ, படித்த வண்ணமோ, பிடித்த வண்ணமாக இருக்கவேண்டியது திண்ணம்! :)
  At Friday, October 19, 2007 2:51:00 AM Blogger Arun நவின்றது:
dei.. good one da..

அறிமுகமாகிச் சில மாதங்களே
ஆனாலும் கட்டாயத்தின் பூச்சுகள்
கடுகளவும் இல்லாது சிநேகத்தின்
வழியாய்த் தாய்மை காட்டும்
அறைவாசிகளும்

this, i dint understand da :((.. vara vara un thamizh puriyaradhe periya challengaa irukku.. hehe..

ellaarum, super supernu sollumbodhu, let me pinch u slitely..

7 years back, the poems u used to write were more of very rhythmic poems with so much korvai and all that..

but now u have moved to more of prose broken into lines type.. though ur message is very different and awesome these days, poem needs some rules right?? so i feel time to draw a line in between da.. i am sure u know where to draw the line.. dont miss out the message looking for poetic ones, and dont miss out on poetry loking for message.. trade off needed nanbaa..
@arun,

//dei.. good one da.. //

thanks da.

//this, i dint understand da :((.. vara vara un thamizh puriyaradhe periya challengaa irukku.. hehe.. //

hm....என்னடா புரியவில்லை? அறைவாசிகள் ‍என்றால் அறையில் உடன் தங்கியிருப்பவர்கள். ஆங்கிலத்தில் சொல்வது என்றால் Roommates.

இப்பொழுது புரிகிறதா? இதில் என்னடா ஒரு சவால்? :)

//ellaarum, super supernu sollumbodhu, let me pinch u slitely..//

yeah sure.. you are most welcome dear! :)
@Arun,

//7 years back, the poems u used to write were more of very rhythmic poems with so much korvai and all that.. //

perhaps it might have been. but i remember you were also one among them who used to change my style to use simple words so that it will reach ordinary people.

in 2005 in my room (domlur), when i have shown you vairamuthu's Video CD of his poems ('கவிதையே பாடலாக‌'), you asked me to try writing by his way of quoting realtime examples.. especially the poem depicting two women's childhood friendship and one line was, "குச்சி ஐஸ் கூட கலர் கலராய் அழுததடி" (வார்த்தைகள் அப்படியே நினைவில்லை).

Thereafter somehow got adapted towards it. I hope you have been experiencing the same.

So, that way my so-called-style would have got changed. Irukkalaam illaiya? தன்னிலை விளக்கம் தான்.
@Arun,

//but now u have moved to more of prose broken into lines type.. though ur message is very different and awesome these days, poem needs some rules right??//

Yes, very much. I agree with you. Thank you da.

//so i feel time to draw a line in between da.. i am sure u know where to draw the line.. dont miss out the message looking for poetic ones, and dont miss out on poetry loking for message.. trade off needed nanbaa..//

You remain the same dear! definitely would incorporate those! sariyaa? thanks a lot for having spent some time for pouring your kind suggestions!

Take Care.
  At Friday, October 19, 2007 9:40:00 AM Blogger Unknown நவின்றது:
ni
  At Friday, October 19, 2007 9:42:00 AM Blogger Unknown நவின்றது:
//அர்த்ததோடு சிரித்து அமைதியாய்த்
தட்டிக் கொடுக்கும் அப்பாக்களும்,//

u made me to think abt my dad :(

//கடமைகளுக்குத் தற்காலிக
விடுப்புத் தரும் தந்தை தெரசாக்களும்,//


first time kealvi padureanda .. "thanthai therasa". nalla sinthanai.. keep it up
@Jeyan,

//ni//

enna solla varra ppa?
@Jeyan,

//u made me to think abt my dad :( //

Thanks da. But why that sad smiley:( ? Sorry if i triggered your homesick feelings if any!! hm...

//first time kealvi padureanda .. "thanthai therasa". nalla sinthanai.. keep it up
//

just while writing it came da.. probably the male who are into the social activites can be called so. what do you say?

Thank you sir.
@Jeyan,

//u made me to think abt my dad :( //

Thanks da. But why that sad smiley:( ? Sorry if i triggered your homesick feelings if any!! hm...

//first time kealvi padureanda .. "thanthai therasa". nalla sinthanai.. keep it up
//

just while writing it came da.. probably the male who are into the social activites can be called so. what do you say?

Thank you sir.
@arun,

//dei.. good one da..

அறிமுகமாகிச் சில மாதங்களே
ஆனாலும் கட்டாயத்தின் பூச்சுகள்
கடுகளவும் இல்லாது சிநேகத்தின்
வழியாய்த் தாய்மை காட்டும்
அறைவாசிகளும்

this, i dint understand da :((.. vara vara un thamizh puriyaradhe periya challengaa irukku.. hehe..
//

விள‌க்க‌ முய‌லுகிறேன்.

ந‌ம்மைப் போன்று பிழைப்புக்காக‌ அண்டை ஊரிலோ, மாநில‌த்திலோ, தேச‌த்திலோ வாழ்ந்து கொண்டிருக்கும் ந‌ப‌ர்க‌ளில், எங்கோ பிற‌ந்து வ‌ள‌ர்ந்திருந்தாலும் ஒருவனுக்கு உடல் சுகமில்லை எனில், ஒன்றாக‌ உட‌னிருப்ப‌தால் (அறைவாசிக‌ள்) ம‌ட்டுமே அல்லாது [க‌ட்டாய‌த்தின் பூச்சுக‌ள் க‌டுக‌ள‌வும் இல்லாது] முழும‌ன‌தோடு உத‌வி செய்யும் அறைவாசிக‌ளின் அந்த‌ச் சேவை ம‌ன‌ப்பான்மையைச் சொல்கிறேன் இங்கே.

இப்பொழுது புரிகிற‌தா?
  At Tuesday, February 26, 2008 1:54:00 PM Blogger Unknown நவின்றது:
அருண்-காரைக்குடி
may i know who are you and where are you in karaikudi.what are you doing?
@arun,

தங்கள் வரவு நல்வரவாயிற்று.

//may i know who are you and where are you in karaikudi.what are you doing?//

நானும் ஒரு கணிப்பொறியாளன். மென்பொருள் வல்லுநர் என்றும் சொல்கிறார்கள்..

தாங்கள் என்ன செய்கிறீர்கள்?