விரல்நுனி சிநேகம்
கேட்டபின் தருவதா
தானாக எடுப்பதா,
உதறி எடுப்பதா
உரிமையாய்க் கொடுப்பதா
எது எப்படியோ
உண்மையான வாஞ்சையுடன்
வருடும் போது
சத்தியமாய்க் கரையும்
உயிரின் மூலம்..
ஆழ்ந்த தழுவல்,
அகலத் தழுவல்,
அவசரத் தழுவல்
எவற்றோடும் சேராவிடினும்
அனைத்துக்கும் ஆதாரமாய்
ஒரு அன்பான தழுவல்!
வேருக்கு ஊற்றிய நீரில்லை இது
புல்நுனியில் பனி!!
அளவிடமுடியா அர்த்தம் சொல்லும்
நீ தொடும் என் விரல் நுனி!
உறவுகள் பேதமில்லை. உண்மை
அன்புக்கு வேதமில்லை.
அன்பு, பாசம், நேசம், காதல்,
காமம், மகிழ்ச்சி, நன்றி, நெகிழ்ச்சி, சோகம்,
பிரிவு, ஏகாந்தம், தன்னிரக்கம்
இப்படி உணர்வுகள் கலந்த அனைத்துப்
பரிமாற்றங்களிலும் தயவுசெய்து
ஒரு சிறு ஸ்பரிசத்தினை மட்டும் விட்டுவைப்போம்.
வயிறுமுட்டத் தின்றாலும் செரிப்பதற்குத்
தேவைப்படும் ஊறுகாயைப் போல.
அவசரமாய்ப் புறப்படும் நேரத்தில்
புணர்ச்சிக்கு இருக்காது அவகாசம்.
பிரிந்திருக்கும் நேரமெல்லாம் அன்பைப்
பறைசாற்றும் விரல்நுனியின் சகவாசம்.
பிறந்த சிசுவின் முதல் பாஷை,
குழந்தைப் பருவ சிநேகம்,
வகுப்பறைப் பிரிவுபசாரங்கள்,
இக்கட்டான சூழ்நிலைகள்,
எதிர்பாலருக்கான இயல்பான ஈர்ப்பு,
மனமார்ந்த மன்னிப்பு,
பிரிந்தபின் இணைப்பு,
புரியாத பரபரப்பு - இவை
எல்லாவற்றிலும் தேவையான அளவு
ஆதரவு இந்த ஒற்றைத் தொடுதலில் உண்டு!
ஆழ்கடலின் அகப்பட்டதை
அப்பட்டமாய்ப் படம்பிடிக்கும்
கலைடாஸ்கோப் மாதிரி
ஆழ்மனதின் பொக்கிஷங்களை
அழகாய் வெளிக்கொணரும் இந்த ஸ்பரிசம்!
மழையில் ஈரப்பதம்,
நெருப்பில் கதகதப்பு,
நட்பில் புரிதல்,
உறவில் விட்டுக்கொடுத்தல்,
தாய்மையில் மன்னிப்பு,
அன்பில் ஸ்பரிசம்! ஒரு
அருமைக் கவசம்!
ஆயிரம் பக்க வசனங்கள்,
மூன்றரை மணி நேரத் திரைப்படம்,
முக்கால் நாள் உடனிருத்தலை விட,
அரை நிமிட அக்கறையான சம்பாஷணை
அழகாய் அரங்கேறும் விரல்நுனியில்!
புரிதலின் அர்த்தமாய்ப் புலப்படும் இந்தத்
துரிதநிலைத் தொடு உறவு.
தானாக முன்வந்து
தயங்காமல் அன்புசெலுத்துகையில்
தாய்மை உணர்வில் சிறுபகுதி
தாரை வார்க்கப்படும் இந்தத்
தன்னம்பிக்கையோடு கூடிய
ஒரு விரல்நுனி சிநேகத்தில்!
பல நேரங்களில் இது
முதல்நாள் மூலதனம்
சில தருணங்களில் இது
கடைசிநேரக் கையிருப்பு!
சிறுதுளி பெருவெள்ளமாமே?
ஒவ்வொரு உறவையும் அன்போடு கூடிய
அமைதியான தொடுதலில் ஆரம்பிப்போம்!!
வருங்கால சந்ததியினருக்குத் தொண்ணூறு
வயதுக்கிழவன் நடும் கன்றாய்
வயதுகளில் பேதமின்றி அனைவரும்
ஒற்றுமையோடு வாழ்வோமே நன்றாய்!
Labels: நடைமுறை நிகழ்வுகள், போட்டி
16 பின்னூட்டங்கள்:
//Since you talk about 'Affection" you have covered romantic, childhood, motherly and old age all together.
Good one.//
நன்றி ப்ரியா.
//வருடும் போது
சத்தியமாய்க் கரையும்
உயிரின் மூலம்..//
இது நிஜம் தான்.
//அனைத்துக்கும் ஆதாரமாய்
ஒரு அன்பான தழுவல்!//
ஆமாம் நான் கூட சில நேரம் இதுக்காக ஏங்கியதுண்டு.
//பிரிந்திருக்கும் நேரமெல்லாம் அன்பைப்
பறைசாற்றும் விரல்நுனியின் சகவாசம்.//
ப்பா..
கொன்னுட்டீங்க...சொந்த அனுபவமோ?
//தன்னம்பிக்கையோடு கூடிய
ஒரு விரல்நுனி சிநேகத்தில்!//
ரொம்ப அருமை... ம்ம்ம்ம்
//ஒவ்வொரு உறவையும் அன்போடு கூடிய
அமைதியான தொடுதலில் ஆரம்பிப்போம்!! //
ம்ம்ம்... எங்கயோ போயிட்டீங்க..
மொத்தத்தில் ரொம்ப அருமை. சூப்பர்.
அப்பட்டமாய்ப் படம்பிடிக்கும்
கலைடாஸ்கோப் மாதிரி
ஆழ்மனதின் பொக்கிஷங்களை
அழகாய் வெளிக்கொணரும் இந்த ஸ்பரிசம்! "
This one line gives whole meaning of the topic.. Good comparison da.. Hatsoff.. :))
//இது நிஜம் தான்.//
நன்றிங்க.. சரியா கண்டுபிடிச்சதுக்கு!
//ஆமாம் நான் கூட சில நேரம் இதுக்காக ஏங்கியதுண்டு//
வாவ்.. சரிதாங்க.. மனித மனம் பொதுவாக இதில் விதிவிலக்கல்ல!! என்ன?
//ப்பா..
கொன்னுட்டீங்க...சொந்த அனுபவமோ?//
யாரைக் கொன்னேன்? :) சொந்த அனுபவமா? ம்ஹீம்.. அப்படின்னும் சொல்ல முடியாது. பெரும்பாலும் அனுபவிச்சு எழுதறது தான்..
//ரொம்ப அருமை... ம்ம்ம்ம்//
நன்றி.. ம்ம்ம்ம்...
//ம்ம்ம்... எங்கயோ போயிட்டீங்க..
மொத்தத்தில் ரொம்ப அருமை. சூப்பர்//
எங்கே போனேன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க.. :) இங்கே தான் இருக்கேன் நான்..
மிக்க நன்றி உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு.
//This one line gives whole meaning of the topic.. Good comparison da.. Hatsoff.. :))//
நன்றி விஜி. கலக்கிப்புட்டீக போங்க..
//very touchy lines!//
வாங்க வாங்க.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க..
நன்றி பத்மப்ரியா..
Good one.