Wednesday, August 09, 2006

ஹைக்கூ கவிதைகள் - 2

தேர்வில் தோல்விகண்ட மாணவன்,
திட்டவோ மனம் ஒப்பவில்லை!
பிறந்தநாள் இனிப்புடன் எதிரில்..


பையில் பணமிருந்தும்
தானமிட இயலவில்லை..
உடனடியாய் ஒளிர்ந்தது பச்சைவிளக்கு!


மிக அழகாயிருந்தும்
எடுத்துக் கொஞ்ச வசதியில்லை..
புகைப்படக் குழந்தை.


உன் தண்மையைக் கடன்வாங்கக்
கன்னம்வைத்த நிலவின் கன்னத்தில்
உன் செல்லக்கிள்ளல்..
தோல்வியை எண்ணி அடிக்கடி தேய்கிறது..

 
posted by Raghavan alias Saravanan M at 8/09/2006 07:24:00 PM, | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ கவிதைகள் - 1

நெரிசல் மிகுந்த சாலையைக்
கவனமின்றிக் கடக்கிறேன்..
நடுரோட்டில் குழந்தை...


பலவருடப் பரிச்சயமெனினும்
இதழில் இறுக்கம்
உடன் சந்தேகக் கணவன்.


உன் பாதம் பட்ட இடம்
காதல் பூக்கள் கனிகிறதாம்
கடலலை தொடர்ந்து நீர்வார்க்கிறது!



தெரிந்தே தவறு செய்கிறார்
மதுபானக்கடை முதலாளி..

 
posted by Raghavan alias Saravanan M at 8/09/2006 07:20:00 PM, | 2 பின்னூட்டங்கள்
Monday, August 07, 2006

கைதேர்ந்த கெட்டிக்காரி!

செய்யாத செயலை மட்டுமல்ல
செய்கின்ற செயலைக் கூட
மறைத்து மறுப்பதில்
நீ கைதேர்ந்த கெட்டிக்காரி!

ஆம்! உன் காதலை
இன்னும் கன்னிகழிய
விடாமல் கட்டிக்காக்கிறாயே!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 8/07/2006 02:30:00 PM, | 2 பின்னூட்டங்கள்
Sunday, August 06, 2006

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..



அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...


தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன்.
 
posted by Raghavan alias Saravanan M at 8/06/2006 04:26:00 PM, | 5 பின்னூட்டங்கள்
Friday, August 04, 2006

பொறுமையின் பெருமை

என்னிடமிருந்து வரும்
எந்த அழைப்புகளுக்கும்
உன்னிடமிருந்து பதிலே இல்லை..

எனக்குப்பிடித்த உன்னுடைய
குணாதிசயங்களில் செல்லத்
திமிரும் சேர்ந்து கொண்டது
விடாப்பிடியாக...

அன்றைய மாலைப்பொழுதில்
காக்க வைத்த தருணங்களுக்கும்
சேர்த்துத் தந்தாய் காதல்முத்தங்களை..

பொறுமையின் பெருமை
தெளிவாக விளங்கிற்று..

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 8/04/2006 11:07:00 AM, | 5 பின்னூட்டங்கள்