Friday, August 04, 2006

பொறுமையின் பெருமை

என்னிடமிருந்து வரும்
எந்த அழைப்புகளுக்கும்
உன்னிடமிருந்து பதிலே இல்லை..

எனக்குப்பிடித்த உன்னுடைய
குணாதிசயங்களில் செல்லத்
திமிரும் சேர்ந்து கொண்டது
விடாப்பிடியாக...

அன்றைய மாலைப்பொழுதில்
காக்க வைத்த தருணங்களுக்கும்
சேர்த்துத் தந்தாய் காதல்முத்தங்களை..

பொறுமையின் பெருமை
தெளிவாக விளங்கிற்று..

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 8/04/2006 11:07:00 AM, |

5 பின்னூட்டங்கள்:

  At Monday, August 07, 2006 7:23:00 AM Blogger சீனு நவின்றது:
gr8...nalla irukkunga...but eppo ellam kathukittu irunthaa vittutu poyeduralunganu nenaikerean..anyhow, ennaku experience illainga
நன்றி சீனு.

நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் பொருத்தமாயிருக்கலாம் தோழரே... ஆனால் சில இடங்களில் விதிவிலக்கு இருக்கலாம் அல்லவா...

(என்னய்யா நானே ஏதோ கஷ்டப்பட்டு கனாக்கண்டு இல்லாத காதலை இருக்கிற மாதிரி எழுதினால், அதிலும் மண்ணள்ளிப் போடுவீர் போலிருக்கிறதே - என்றெல்லாம் நான் சத்தியமாய் உங்களைக் கேட்க மாட்டேன் சீனு ;-)).

தங்களின் தொடர்ந்த ஆதரவு மகிழ்ச்சியைத் தருகிறது.. மிக்க நன்றி சீனு.
நன்றி காண்டீபன்.. வருகைக்கும் பின்னூட்டப் பதிவுக்கும்...
"என்னிடமிருந்து வரும்
எந்த அழைப்புகளுக்கும்
உன்னிடமிருந்து பதிலே இல்லை..

எனக்குப்பிடித்த உன்னுடைய
குணாதிசயங்களில் செல்லத்
திமிரும் சேர்ந்து கொண்டது
விடாப்பிடியாக..."...

ம்... ஒருவரை மனதுக்குப் பிடித்து விட்டால்... அவர்களின் குணங்களும் கூடவே பிடித்துப் போவது உண்மைதான்.

கவிதை அருமை.
@சத்தியா,

மிகத் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். இதைக் கவனிக்கத் தவறிவிட்டேன் அல்லது அவ்வளவு தூரம் இதில் ஈடுபட இயலவில்லை முன்பு.

//ம்... ஒருவரை மனதுக்குப் பிடித்து விட்டால்... அவர்களின் குணங்களும் கூடவே பிடித்துப் போவது உண்மைதான்.

கவிதை அருமை.
//

நன்றி. நீங்கள் சொன்னதும் சரியே.