Wednesday, August 09, 2006

ஹைக்கூ கவிதைகள் - 2

தேர்வில் தோல்விகண்ட மாணவன்,
திட்டவோ மனம் ஒப்பவில்லை!
பிறந்தநாள் இனிப்புடன் எதிரில்..


பையில் பணமிருந்தும்
தானமிட இயலவில்லை..
உடனடியாய் ஒளிர்ந்தது பச்சைவிளக்கு!


மிக அழகாயிருந்தும்
எடுத்துக் கொஞ்ச வசதியில்லை..
புகைப்படக் குழந்தை.


உன் தண்மையைக் கடன்வாங்கக்
கன்னம்வைத்த நிலவின் கன்னத்தில்
உன் செல்லக்கிள்ளல்..
தோல்வியை எண்ணி அடிக்கடி தேய்கிறது..

 
posted by Raghavan alias Saravanan M at 8/09/2006 07:24:00 PM, |

2 பின்னூட்டங்கள்:

  At Monday, April 09, 2007 5:07:00 PM Anonymous Anonymous நவின்றது:
மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது

இது எல்லாம் நீங்கள்

எழுதிய கவிதையா??
@பிரியா,
உங்கள் வரவு நல்வரவாயிற்று..

நன்றி தோழி.. ஆம்.. நானே எழுதியது...

பிறரின் படைப்புக்களாயிருப்பின் நிச்சயம் 'படித்ததில் பிடித்தது' அல்லது 'இன்னார் எழுதியது' என்று குறிப்பிட்டிருந்திருப்பேன்...