Wednesday, January 26, 2011

ப‌டைப்பின் பூர‌ண‌ம்

இடுப்பில் குழந்தையை
ஏந்திக் கொண்டு
இறை வழிபாட்டிற்கு
வந்தனள் தாய்!

இன்முகத்தோடு சிரித்திருந்த‌
குழந்தை “இரு! இரு!
அம்மாக்கிட்ட சொல்லித்
தர்றேன் உன்னை
”
என்று பெருமிதத்தோடு
மிரட்டியது கடவுளை!

த‌ன‌க்கான‌ அவ‌சிய‌ம்
இனி இல்லை என்ற‌
த‌ன்னிறைவில்,
படைப்பின் பூரணத்தில்
க‌ளித்துத் திளைத்தார் க‌ட‌வுள்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 1/26/2011 09:45:00 PM, |

3 பின்னூட்டங்கள்:

Superb kavithai...........
This comment has been removed by the author.
Super,

நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு. தாமதத்திற்கு வருந்துகிறேன்.