Sunday, May 14, 2006

எ(மு)ன் குறிப்பு....

அன்பான கவிதை நே([சு]வா)சிக்கும் நெஞ்சங்களுக்கு,

என் உள்ளத்துள் ஊறிய உணர்வுகளின் எழுத்து வடிவமே இங்கே வலைப்பூக்களாய்த் தூவப்பட்டிருக்கின்றன....

நிச்சயம் இந்தப் பூமரங்கள் உங்கள் இனிமையான இதயத்துள் சாமரங்கள் வீசும் என்ற பலமான, நலமான நம்பிக்கையில் தொடுத்திருக்கிறேன்...

முத்தம் வழங்கிய தாய் தன் குழந்தையிடம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை. ஆயினும் உடனடியாக, வாங்கிய முத்தத்திற்குப் பரிசாக தன்னால் முடிந்த அளவு முத்தமழை பொழியும் மழலையைக் காண்கையில் தாய் எவ்வளவு உவகையடைவாளோ அந்த அளவுக்கு உங்கள் மேலான விமரிசனங்கள் என்னை உற்சாகப்படுத்தும்! ஊக்கப்படுத்தும்!!!

பள்ளி செல்லும் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.. சில ஆண்டுகள் இடைவெளி விட்டுக் கல்லூரிப் பருவத்தில் இன்னும் சற்றே மேம்பட்ட வடிவில் எழுதினேன்... இதுகாறும் என்னை ஊக்கப்படுத்திய, ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிற அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகளை அர்ப்பணிக்கிறேன்....

வாழ்த்துங்கள்... வளர்கிறேன்...!!!

தோழமையுடன்.....
 
posted by Raghavan alias Saravanan M at 5/14/2006 10:55:00 PM, |

7 பின்னூட்டங்கள்:

  At Monday, May 15, 2006 9:13:00 AM Anonymous Anonymous நவின்றது:
ne melum melum pala kavithaikal elutha en manamartha vazhtukal..
நன்றி நண்பா.... வழக்கம் போல
இதிலும் முதல் பின்னூட்டம் உன்னுடையதே...
  At Wednesday, May 17, 2006 9:57:00 AM Anonymous Anonymous நவின்றது:
:))
wishes raghs
நன்றி கணேஷ்.

எப்படிப் போகிறது வாழ்க்கைப் பயணம்?
வாழ்த்துகள் தம்பி சரவணன்,

இணையத்தில் என்றும் உங்கள் நிலைத்திருக்க வாழ்த்துகள்

ஏற்கனவே இராகவன் என்பவர் இருக்கிறார், நீங்க இரு பெயரையும் கொடுப்பதால் குழப்பம் வராது.

அப்புறம் அந்த Word Verification அதை எடுத்து விடுங்களேன்.
மிக்க நன்றி பரஞ்சோதி அண்ணா.

நன்றாகச் சொன்னீர்கள். பெற்றோர்கள் இட்ட பெயர் அப்படியே வழங்கப் பெறட்டும் என்ற எண்ணத்தில் தான் நான் எப்பொழுதும் என் முழுப்பெயரையும் குறிப்பிடுவது வழக்கம்.

தங்களுக்குச் சிரமமாய் இருக்கிறதா அண்ணா? எனில் எடுத்துவிடுகிறேன் இப்பொழுதே. சில சமயங்களில் அநாவசியமான பின்னூட்டங்களைத் தவிர்க்கும் என்ற நோக்கத்திலேயே அதனை வைத்தேன்.

இன்று காலையில் கூட ஒரு அன்பரின் முகம்சுளிக்க வைக்கும் பின்னூட்டத்தை அகற்ற வேண்டியிருந்தது (பெயர் சொல்ல விரும்பவில்லை). அதன் பிறகே யோசித்தேன்.. 'Comment Moderation' வைத்திருக்கலாமோ என்று?

தெரியவில்லை இது எவ்வளவு தூரம் போகிறது என்று? மனதுக்குச் சங்கடமாயிருந்தது எனினும் 'மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவானேன்' என்று அதை என் சிந்தனையிலிருந்தும் அகற்றி விட்டேன்.