Tuesday, November 14, 2006

பிரம்மாக்கள் பலவிதம்!

உன்னைப் படைக்கும் முன்
கடைசியாய் ஒருமுறை
பிரம்மன் நிச்சயம் போதையில்
இருந்திருப்பான்..

படைத்த பின் அத்துணையும்
உன்னுள் இறங்கி விட்டதே!!!

அவன் உன்னைப்
படைத்த பிரம்மன்..
இவன் உன்னைப்
படித்த பிரம்மன்..

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 11/14/2006 06:56:00 PM, | 5 பின்னூட்டங்கள்

சுகம் - பரமசுகம்...

அயல் நாட்டிலோ
அண்டை மாநிலத்திலோ
தாய்மொழி கேட்டல் சுகம்!

வேறு யாருடனோ
வேறு நினைவுகளுடனோ
உரையாடுகையில்
உன் நினைவுகள்
உறவாடுதல் பரமசுகம்...

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 11/14/2006 06:49:00 PM, | 2 பின்னூட்டங்கள்

படித்ததில் பிடித்தது...(உனக்காகக் காத்திருந்த வகுப்பறை)

நேற்றிரவு அன்புடன் குழும நண்பர்களைச் சந்தித்ததில் நண்பர் விக்கி (எ) ப்ரியன் அனைவருக்கும் தனது மற்றும் நேற்றைய சந்திப்பின் நினைவாக ஆளுக்கொரு கவிதைப் புத்தகத்தினை வழங்கினார்..

விசேஷம் என்னவென்றால் சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருமே அவர் கொண்டு வந்திருந்த அத்துணைப் புத்தக்ங்களிலும் கையெழுத்திட்டோம்... அவருக்கு ஒரு சபாஷ் மற்றும் அவரோடு சேர்த்து சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!!! ஒரு இனிய மாலைப் பொழுது இன்பமாகக் கழிந்த்து PVR - Transit -ல் நேற்று.

எனக்குத் தரப்பட்ட புத்தகம் "உனக்காகக் காத்திருந்த வகுப்பறை" - மணிபாரதி எழுதியது (இவர் மணிரத்னம், வஸந்த், சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்..)

அந்தப் புத்தகத்தில் படித்த கவிதைகளில் எனக்குப் பிடித்த கவிதைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..

"எத்தனை முறை
வேண்டுமானாலும் சத்தியம்
செய்கிறேன்..

அப்பொழுதாவது உன்
கைகளைத் தொட முடிகிறதே!"



"இனியொரு முறை
கண்ணாடி முன் நின்று
முகம் பார்க்காதே

உனக்குச் சமமாக
உன் பிம்பம் இருப்பதைக் கூட
என்னால் தாங்க இயலாது!"



தொடரும்.....

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 11/14/2006 06:29:00 PM, | 4 பின்னூட்டங்கள்